முதுகு வலிக்கான நவீன நிவாரண சிகிச்சை

Published By: Digital Desk 2

29 Aug, 2024 | 07:52 PM
image

இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினர் நாற்பது வயதிற்குள்ளாகவே முதுகு வலியால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சுகாதார வல்லுநர்கள் கவலையுடன் குறிப்பிடுகிறார்கள்.

இந்நிலையில் முதுகு வலி ஏற்படுவது குறித்தும், எத்தகைய முதுகு வலிக்கு வைத்திய நிபுணர்களிடம் சிகிச்சை பெற வேண்டும் என்பது குறித்தும், மக்களிடத்தில் முறையான விழிப்புணர்வு இல்லை என்றும் வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

தற்போதைய நிலையில் நாற்பது வயதிற்குட்பட்ட இளைய தலைமுறையினருக்கு ஏற்படும் முதுகு வலி பெரும்பாலும் மெக்கானிக்கல் பேக் பெயின் என்றும், போஸர் ரிலேட்டட் பேக் பெயின் என்றும் வகைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு முழுமையான நிவாரண சிகிச்சை வழங்கப்படுகிறது.

இதன் போது இயன்முறை சிகிச்சை, பிரத்யேக அங்கி அணியும் நிவாரண சிகிச்சை, மருந்தியல் சிகிச்சை, ஓய்வு மற்றும் கட்டாய ஓய்வு ஆகியவற்றை  மேற்கொண்டால் முதுகு வலியால் பாதிக்கப்படும் எண்பது சதவீதத்தினருக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதே தருணத்தில் முதுகு வலிக்கான பிரத்யேக வலி நிவாரணியுடன் கூடிய மருந்தியல் சிகிச்சை பெற்றும் முழுமையான நிவாரணம் கிடைக்காமல் இரண்டு வாரங்களுக்கும் மேலாக அந்த வலி நீடித்தாலோ வலி நிவாரணத்திற்காக இயன்முறை சிகிச்சையை தொடர்ந்து பெற்றும் பலன் அளிக்கவில்லை என்றாலோ முதுகு வலி  முதுகில் மட்டும் இல்லாமல் கால் பகுதிக்கும் பரவி, அங்கும் மரத்து போதல் போன்ற தன்மை ஏற்பட்டாலோ ஓய்வு எடுத்த பிறகும் முதுகு வலி தொடர்ந்தாலோ முதுகு வலியால் உங்களது உறக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டாலோ முதுகு வலியுடன் காய்ச்சல், திடீரென்று உடல் எடை குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டாலோ நீங்கள் உடனடியாக தண்டுவட சிகிச்சை நிபுணரையும் சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.

வைத்தியர் விஜயராகவன்

தொகுப்பு அனுஷா 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ராப்டோமயோலிசிஸ் எனும் தசை திசு சிதைவு...

2024-10-01 16:55:55
news-image

எக்டோபிக் பீட்ஸ் எனும் சமச் சீரற்ற...

2024-09-30 17:00:57
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் தட்டையான பாத...

2024-09-26 16:56:32
news-image

சர்க்கரை நோயால் செவித்திறன் பாதிப்பு ஏற்படுமா..?

2024-09-25 16:21:32
news-image

மூட்டு பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2024-09-24 17:58:19
news-image

சர்கோபீனியா எனும் தசை சிதைவு பாதிப்பிற்குரிய...

2024-09-23 17:07:13
news-image

கல்லீரல் அழுத்த பாதிப்புக்கான சிகிச்சை

2024-09-23 16:39:09
news-image

இதய ரத்த நாள அடைப்பு பாதிப்பை...

2024-09-20 02:54:17
news-image

புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் 4...

2024-09-17 15:21:49
news-image

சிகெல்லா கேஸ்ட்ரோன்டிரிடிஸ் எனும் இரைப்பை குடல்...

2024-09-17 10:24:41
news-image

செப்சிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-09-14 16:45:08
news-image

பி சி ஓ டி பாதிப்பு...

2024-09-14 16:14:37