உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவு

29 Aug, 2024 | 07:56 PM
image

காலித் ரிஸ்வான்

கடந்த  சில நாட்களாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்றுவந்த உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டி கடந்த திங்கட்கிழமை (26) வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது. இது சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமராகிய முஹம்மத் பின் சல்மானின் ஆதரவின் கீழ் நடைபெற்றது.

கடந்த 8 வாரங்களாக நடைபெற்றுவந்த இந்த E-விளையாட்டுக்கள் உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்க உலகெங்கிலும் இருந்து பல கழகங்கள் மற்றும் வீரர்கள் முதல் முறையாக ரியாத் நோக்கி வந்தனர். 60 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பரிசுத்தொகையுடன், இந்த நிகழ்வு சுமார் 500 அணிகளையும் 1,500 தொழில்முறை வீரர்களையும் ஈர்த்தது, இது E- விளையாட்டுக்கள் வரலாற்றில் மிகப் பெரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இந்நிகழ்வின் இறுதியல் 2024ம்ஆண்டுக்கான E-விளையாட்டுக்கள் உலகக் கிண்ணத்தின் சாம்பியன்களாக சவூதியின் ஒரு குழுவான "Team Falcons" தெரிவானர். உலகக் கிண்ணமானது அந்நாட்டு முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான அவர்களால் கையளிக்கப்பட்டது. Falcons கிளப் ஆனது மொத்தம் $7 மில்லியன் பரிசுத்தொகையைப் பெற்றதோடு இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க போட்டியில் சிறந்த கிளப்பாகவும் தேர்வானது.

"Call of Duty: Warzone" மற்றும் "Free Fire" சாம்பியன்ஷிப் ஆகிய இரண்டிலும் முதல் இடத்தைப் பெற்று, 12 போட்டிகளில் 5,665 புள்ளிகளைப் பெற்று தர வரிசையில் Falcon அணி முன்னிலை வகித்தது. இந்த வெற்றியானது E-விளையாட்டுக்கள் துறையில் சவூதியின் ஆர்வத்தையும் அதன் பால் உள்ள திறமையையும் எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.

இந்த நிகழ்வானது,  கேமிங் மற்றும் E-விளையாட்டுக்களில் ஈடுபடுவோர் மற்றும் ஆர்வமுள்ள சாராரை ஒன்றிணைக்கும் நோக்கில், சர்வதேச E-விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள், E-விளையாட்டுக்களை தயாரிப்பவர்கள் மற்றும் வெளியீட்டாளர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்தது, இது E-விளையாட்டுக்கள் துறையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகிறது.

இந்த E-விளையாட்டுப் போட்டியானது அதன் தனித்துவமான multi-game மற்றும் multi-genre வடிவமைப்புடன், உலகின் தலைசிறந்த கிளப்புகளுக்கு இடையேயான போட்டிகளைக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், E-விளையாட்டுக்கள் துறையை முன்னேற்றுவதற்கான சர்வதேச நிறுவனங்களின் முயற்சிகளையும் மேலும் உரமூட்டியது. அத்தோடு இது சமூகங்களில் E-விளையாட்டுக்களின் நேர்மறையான தாக்கத்தை எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாமல் கலாச்சார பரிமாற்றத்தையும் மேம்படுத்துகிறது. E-விளையாட்டுத்துறையை ஒரு நம்பிக்கைக்குரிய மற்றும் முக்கிய முதலீட்டு வாய்ப்பாக அங்கீகரிக்க நிறுவனங்களை ஊக்குவிக்கவும் செய்துள்ளது.

இந்நிகழ்வானது இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்நிகழ்வுக் காலத்தில் ரியாத் நகரிற்கு வருகைதந்த பயணிகளின் எண்ணிக்கை 29% அதிகரித்துள்ளது. இந்த நிகழ்வின்போது 32 க்கும் மேற்பட்ட மேலதிக பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வானது  500 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் ஈரத்து மொத்தம் 250 மில்லியனுக்கும் அதிகமான மணிநேரம் பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டுக்கான ஒரு புதிய உலக சாதனையாகவும் இது அமைந்துள்ளது.

கேமிங் மற்றும் E-விளையாட்டுக்கள் துறையானது உலகளவில் வேகமாக  வளர்ந்துவரும் முதலீட்டு  மற்றும் தொழில்துறைகளில் ஒன்றாக காணப்படுகிறது. 2023ஆம் ஆண்டில் மட்டும் உலகளாவிய சந்தையில் தோராயமாக $200 பில்லியனை எட்டியுள்ளது. சவூதி அரேபியா அன்மைக்காலத்தில் முக்கிய உலகளாவிய நிகழ்வுகளை நிகழ்த்துவதிலும் அந்தநிகழ்வுகளை நோக்கி சர்வதேச மக்களை ஈர்ப்பதிலும் குறிப்பிடத்தக்க வெற்றியைக் கண்டுள்ளமை நாம் அறிந்ததே, அந்த வரிசையில் தான் இந்த E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியை நடாத்தியமையும், 2025 ஆம்ஆண்டு E-விளையாட்டுக்களுக்கான ஒலிம்பிக் போட்டியை நடாத்துவதற்கான அறிவிப்பை சவூதி வெளியிட்டமையும் அடங்குகின்றன.

2030 ஆம் ஆண்டாகும்போது E-விளையாட்டுக்களுக்கான முக்கிய தளமாக சவூதி அரேபியா வரவேண்டும் என்ற இலட்சிய நோக்கோடு இவ்வாறான நிகழ்வுகள் அந்நாட்டுத் தலைமைகளின் நேரடி அலோசனையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்கள் அனைத்தும் சவூதியின் விஷன் 2030 இலட்சிய திட்டத்தின் கிழ் வடிவமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் சிறப்பம்சங்கள்

2024-09-10 15:40:23
news-image

உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப்...

2024-08-29 19:56:50
news-image

இந்தியாவின் நடமாடும் மருத்துவமனைகள் ; ஆக்ராவில்...

2024-05-22 20:10:13
news-image

“பிக்சல் ப்ளூம்” கொழும்பு தாமரை கோபுரத்தில்...

2024-05-11 09:37:56
news-image

கடந்த வருடம் இலங்கையில் கணினிகளில் ஒரு...

2024-05-10 12:24:26
news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57