தமிழ் திரையுலகில் சந்தை மதிப்புள்ள நட்சத்திர நடிகரான ஜீவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'பிளாக்' என பெயரிடப்பட்டு, அதன் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் படமாளிகையில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கே. ஜி. பாலசுப்பிரமணி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பிளாக்' எனும் திரைப்படத்தில் ஜீவா, பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, சிவ ஷா ரா, ஸ்வயம் சித்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் எல் எல் பி பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரபு - எஸ். ஆர். பிரகாஷ் பாபு - பி .கோபிநாத் - ஆர். தங்க பிரபாகரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் ஜீவா கையில் பல வகையினதான ஆயுதங்களுடன் தோன்றுவதும் , பின்னணியில் கருமேகங்கள் சூழ்ந்திருப்பதும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
இதனிடையே நடிகர் ஜீவா நடிப்பில் 20 மாதங்களுக்குப் பிறகு வெளியாகும் படம் இது என்பதால்.. அவரது ரசிகர்கள் இப்படத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM