சிங்கப்பூரில் இயங்கிவரும் கலா மஞ்சரி அமைப்பு கடந்த 21ஆம் திகதி சென்னையில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்துடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
கலா மஞ்சரி அமைப்பு தமிழிசையை வளர்க்கும் நோக்கில் சிங்கப்பூரில் 2018இல் தொடங்கப்பட்டது.
கலா மஞ்சரி லிஷா பொங்கல் திருவிழா, தமிழ் மொழி விழா, நற்பணி சமூக குதூகலம் ஆகியவற்றில் பங்குபற்றியுள்ளது.
தமிழ் இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்ட ஆத்திசூடி, கடையேழு வள்ளல்கள் போன்ற நிகழ்ச்சிகளை படைத்துள்ளது.
மேலும், நாட்டுப்புற இசையைப் பற்றிய கருத்தரங்கையும் நாட்டுப்புற இசை பற்றிய பன்னாட்டு கருத்தரங்கத்தையும் இணையவழி ஊடாக நடத்தியது.
மேலும் வெளிநாட்டு நிறுவனங்களின் நிகழ்ச்சிகளை சிங்கப்பூரில் படைத்துள்ளது.
கலாமஞ்சரி சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் தமிழ் சான்றோர்களான திருவள்ளுவர், மகாகவி பாரதியார், பாரதிதாசனார், ஒளவையார் போன்றோரின் உருவப் படங்களை ஐஸ் க்ரீம் குச்சிகளில் வரைந்து 2023ஆம் ஆண்டு சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.
2023ஆம் ஆண்டு சென்னை தமிழ் இசை சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கையெழுத்திட்டது. அதன்படி, தமிழ் இசை சங்கம், கலா மஞ்சரியின் மாணவர்களுக்குத் தேர்வுகளை நடத்தி வருகிறது.
கடந்த 21ஆம் திகதி சென்னையில் தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்துடன் கலாமஞ்சரி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அதன் மூலம் கலா மஞ்சரியின் மாணவர்களுக்கு வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல், பரதநாட்டியம் ஆகிய வகுப்புகளுக்கான சான்றிதழ்கள் மற்றும் டிப்ளோமா படிப்புக்கான தேர்வுகளை நடத்தி அவற்றுக்கான சான்றிதழ்களையும் பல்கலைக்கழகம் வழங்கவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM