சஞ்சிகையொன்றின் அட்டைப்படத்தில் இந்துக் கடவுளைப் போல் சித்திரிக்கப்பட்ட தோனி மீது தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்துக் கடவுள் விஷ்ணுவின் தோற்றத்தில் சித்திரிக்கப்பட்ட தோனியின் புகைப்படம் ஒன்று கடந்த ஆண்டு, வர்த்தக சஞ்சிகையொன்றின் அட்டைப்படத்தில் வெளியானது. அதில், விஷ்ணுவின் (தோனியின்) எட்டுக் கைகளிலும் ஒவ்வொரு வியாபாரப் பொருளை  வைத்திருப்பதாக சித்திரிக்கப்பட்டிருந்தது.

குறித்த ஆண்டில் பல்வேறு விளம்பரங்கள் மூலம் அதிக தோனி அதிக வருவாய் ஈட்டியதைக் குறிக்கும் வகையிலேயே அந்தப் படம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்தப் படம் வெளியானதையடுத்து சமூக ஆர்வலரான ஜெயகுமார் என்பவர் தோனி மீதும், குறித்த சஞ்சிகையின் ஆசிரியர் மீதும் கர்நாடக உயர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், அவரையறியாமலேயே சித்திரிக்கப்பட்ட இந்தப் படத்துக்காக அவரைக் குற்றவாளியாகக் குறிப்பிடுவது நியாயமல்ல என்று குறிப்பிட்டு வழக்கைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.