சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' பட அப்டேட்

Published By: Digital Desk 2

29 Aug, 2024 | 04:50 PM
image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி எதிர்வரும் ஒக்டோபரில் வெளியாகவிருக்கும் 'வேட்டையன்' படத்தை பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் 'வேட்டையன்' எனும் திரைப்படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பொலிவுட் சுப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரோகிணி, ராவ் ரமேஷ், ரக்சன், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, தற்போது படப்பிடிப்பு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நடிகை மஞ்சு வாரியர் - தன்னுடைய திரை தோற்றத்திற்கான பின்னணி குரல் கொடுத்து வருகிறார். இதற்கான பிரத்யேக புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

இதனிடையே சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாரான 'வேட்டையன்' திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதியன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் உறுதிபட தெரிவித்திருப்பதால்.. அந்த திகதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நடிகர் சூர்யாவின் 'கங்குவா' திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? என்பதில் ஐயம் நீடிப்பதாகவும்,  இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்றி தெரிவித்த சூர்யா!

2026-08-16 11:12:29
news-image

மகுடம் - திரைப்பட விமர்சனம்

2026-08-15 16:27:02
news-image

ராகவ் ரங்கநாதன் நடிக்கும் 'பீப் '...

2026-08-15 16:29:50
news-image

துஷ்யந்த் நடித்திருக்கும் 'ஆல் பாஸ்' படத்தின்...

2026-08-15 19:13:44
news-image

அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில் அவன்'...

2026-08-15 15:43:22
news-image

குரு சோமசுந்தரம் நடிக்கும் 'பாரீஸ் கஃபே'...

2026-08-15 15:45:02
news-image

விஸ்வநாத் & சன்ஸ் - திரைப்பட...

2026-08-14 20:02:53
news-image

'மொத ராத்திரி'க்காக ஆறு ஆண்டுகள் கஷ்டப்பட்ட...

2026-08-14 14:43:12
news-image

 வெளியீட்டு திகதியை அறிவித்த துல்கர் சல்மானின்...

2026-08-14 14:29:59
news-image

அக்சய் குமார் நடிக்கும் 'ஹைவான்' படத்தின்...

2026-08-14 14:29:28
news-image

கைத்தொலைபேசியால் நடிகை ஷகிலாவுக்கு வந்த வினை...

2026-08-14 09:18:00
news-image

நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் 'மொத ராத்திரி'...

2026-08-13 17:44:56