யோகி பாபு நடிக்கும் 'மலை' படத்தின் முதல் பாடல் வெளியீடு

Published By: Digital Desk 2

29 Aug, 2024 | 04:48 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகராகவும், கதையின் நாயகனாகவும் ஒரே தருணத்தில் இரட்டைக் குதிரை சவாரியை வெற்றிகரமாக செய்து வரும் யோகி பாபு கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'மலை' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'கண்ணசர ஆராரோ..' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஐ.பி. முருகேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மலை' எனும் திரைப்படத்தில் யோகி பாபு, லக்ஷ்மி மேனன், சிங்கம் புலி, காளி வெங்கட், செம்மலர் அன்னம், பிரகதீஸ்வரன், பழ. கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தை லெமன் லீப் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். கணேசன் மூர்த்தி மற்றும் ஜி. சௌந்தர்யா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்ணசர ஆராரோ சொல்லும் இளம் காத்தே..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுத, பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கிறார். ஸ்ரேயா கோஷலின் வசீகர குரலினிமை + டி. இமானின் மயக்கும் இசை மெட்டு எனும் கலவையில் உருவாகி இருக்கும் இந்தப் பாடல் மெல்லிசை பாடல்களை விரும்பி கேட்கும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right