சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தின் புதிய போஸ்டர்

Published By: Digital Desk 2

29 Aug, 2024 | 04:47 PM
image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் 'கூலி' படத்தில் நடிக்கும் நடிகர்கள் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் தோற்ற புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிடத் தொடங்கி இருக்கிறார்கள்.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் 'கூலி' எனும் திரைப்படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், மகேந்திரன், ஷோபனா சௌபின் ஷாகிர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கும் தருணத்தில் படத்தில் நடிகர்கள் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயரும், அவர்களுடைய திரை தோற்ற புகைப்படமும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகர் சௌபின் ஷாகிர்- 'தயாள்' எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பத்தாம் திகதியன்று வெளியாகவிருக்கும் 'வேட்டையன்' படத்தின் புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகும் 'கூலி' எனும் திரைப்படத்தின் தகவல்களும் வெளியாவதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருள்நிதி நடிக்கும் 'அருள்வான்' படத்தின் அப்டேட்

2026-07-14 17:21:12
news-image

ட்ரெயின்' படத்தை கமல்ஹாசனால் கூட நடித்திருக்க...

2026-07-14 16:42:50
news-image

புதுமுகங்கள் நடிக்கும் 'ஆண்ட' டைட்டில் லுக்...

2026-07-14 16:40:34
news-image

கல்லூரி மாணவர்களின் ரீயூனியன் கதையை இயக்கும்...

2026-07-14 15:59:48
news-image

ஞானபீட விருதை பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து

2026-07-14 15:58:27
news-image

டொக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் 'வெல்கம்...

2026-07-14 15:37:24
news-image

நடிகர் பகத் பாசில் நடிக்கும் 'டோன்ட்...

2026-07-13 17:15:25
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-07-13 16:38:42
news-image

ஆங்கிலோ- இந்திய சமூக மக்களின் வாழ்வியலை...

2026-07-13 16:35:45
news-image

திரு வீர்- ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து...

2026-07-13 16:33:09
news-image

இசை குயில் 'எஸ். ஜானகிக்கு இந்தியத்...

2026-07-12 14:14:16
news-image

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி...

2026-07-11 21:42:07