இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான சசிகுமார் கதையின் நாயகனாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'நந்தன்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதியை படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
'கத்துக்குட்டி', 'உடன்பிறப்பே' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா. சரவணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நந்தன் எனும் திரைப்படத்தில் சசிகுமார், ஸ்ருதி பெரியசாமி, இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர் . வி. சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். கிராமத்து பின்னணியிலான இந்த திரைப்படத்தை இரா என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைபடைந்து வெளியீட்டிற்காக நீண்ட நாளாக காத்திருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இருபதாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே சசிகுமார் நடிப்பில் கடந்தாண்டில் வெளியான 'அயோத்தி' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றது என்பதும் , இந்த ஆண்டின் தொடக்கத்தில் சசிகுமார் - சூரி நடிப்பில் வெளியான 'கருடன்' எனும் திரைப்படமும் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது என்பதும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM