அனுராதபுரம் - சாலியபுரம், மான்கடவல பிரதேசத்தில் மகனின் இறுதிச் சடங்கின் போது தாயொருவரும் உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தாயின் மகன் (32) சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கடந்த 17 ஆம் திகதி வீட்டுக்கு வந்த நிலையில், அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மகனின் இறுதிச் சடங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது தாய் மயக்கமுற்று விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று அனுமதித்த போது குறித்த தாய் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

 உயிரிழந்த தாய் ஆறு பிள்ளைகளின் தாய்(55) என்பதுடன், உயிரிழந்த மகன் (32) வெலிசர பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிந்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.