வயல் வேலைக்கு சென்ற நிலையில் யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆமை வட்டை வயல் பிரதேசத்தில் நேற்று புதக்கிழமை (28) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் நிந்தவூர் - 02 இரண்டாம் குறுக்குத் தெரு பிரிவை சேர்ந்த 62 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் சம்மாந்துறை பிரதேசத்தில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது வயல் அறுவடை காலம் என்பதால் யானை நடமாட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கடந்த 20 ஆம் திகதி மாலை மணல் அகழ்வு வேலைக்கு சென்ற நிலையில் யானையினால் தாக்கப்பட்டு சம்பவ இடத்தில் நிந்தவூர் 21 ஆம் பிரிவை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய குடும்பஸ்தர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM