நினைத்ததை நடத்திக் காட்டும் கையெழுத்து பரிகாரம்...!?

28 Aug, 2024 | 05:12 PM
image

ன்றைய சூழலில் எம்மில் பலருக்கும் தேவை என்பது வித்தியாசமானதாகவும், தனித்துவம் மிக்கதாகவும் இருக்கிறது. இதனால் சிலருக்கு பொதுவான பரிகாரங்கள் மேற்கொள்ளும்போது அவை முழுமையான பலன்களை வழங்குவதில்லை. இதனால் எம்முடைய முன்னோர்கள் உங்களது கோரிக்கை மற்றும் வேண்டுகோளுக்கு ஏற்ப பிரத்யேகமான கையெழுத்து வடிவிலான பரிகாரத்தை பரிந்துரை செய்திருக்கிறார்கள். இத்தகைய பரிகாரத்தை தொடர்ச்சியாக நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீங்கள் நினைத்தது நிஜத்தில் நடப்பதை அனுபவத்தில் காணலாம் என உறுதியுடன் தெரிவிக்கிறார்கள்.

உங்களது இஷ்ட தெய்வத்தின் நாமாவளியை, மந்திரத்தை, நாளாந்தம் ஒரு நோட்டுப் புத்தகத்தில் தொடர்ச்சியாக எழுதி வருவது தான் அந்த எளிய பரிகாரம். உதாரணமாக உங்களுக்கு முருகன் இஷ்ட தெய்வம் என்றால் சந்தையில் கிடைக்கும் 40 பக்க கோடிட்ட நோட்டுப் புத்தகத்தை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். செவ்வாய் அல்லது வியாழக்கிழமைகளில் காலை நேரத்தில் நீராடிவிட்டு, முருகனை வணங்கிவிட்டு அந்த நோட்டுப் புத்தகத்தில் 'ஓம் முருகா போற்றி! ஓம் முருகா போற்றி! ஓம் முருகா போற்றி!' என தொடர்ச்சியாக 108 முறை எழுதுங்கள். உங்களது கைகளால் பேனாவை பிடித்து, நேர்த்தியாக எழுதுங்கள். இதனை தொடர்ச்சியாக 21 நாட்கள் வரை எழுதுங்கள்.‌ உங்களது கோரிக்கை இந்த பிரபஞ்சத்தின் கவனத்திற்குள் வந்துவிடும். அதன் பிறகும் அந்தக் கோரிக்கை நிறைவேறுவதற்காக உங்களது முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். அதாவது உங்களிடம் இருக்கும் 40 பக்க நோட்டுகளின் பக்கங்கள் தீரும் வரை தொடர்ச்சியாக நாளாந்தம் 108 முறை 'ஓம் முருகா போற்றி!' என்பதை எழுதிக் கொண்டு வாருங்கள். நோட்டுப் புத்தகம் நிறைவடைவதற்குள் உங்களது கோரிக்கை நிறைவேறுவதை அனுபவத்தில் காணலாம்.

சிலருக்கு வலிமையான பிறவி கர்ம வினையின் காரணமாக பிரபஞ்சம் உங்களது கோரிக்கையை நிறைவேற்ற தாமதம் ஆகும். இப்படி ஒரு நிலை ஏற்பட்டால்... அதாவது முதல் 40 பக்க நோட்டு தீரும் வரை 'ஓம் முருகா போற்றி!' என்ற நாமாவளியை.. மந்திரத்தை.. எழுதிய பிறகும் உங்களது கோரிக்கை நிறைவேற வில்லை என்றால்.. சற்றும் தாமதியாமல் அருகில் இருக்கும் ஆலயத்தில் உள்ள முருகன் சன்னதிக்கு சென்று அவரை மனதார வணங்கி அவரது பாதத்தில் ஒரு புதிய 40 பக்க நோட்டினை சமர்ப்பித்து அர்ச்சித்து அதனை வாங்கி வந்து வீட்டில் அமர்ந்து மீண்டும் நாளாந்தம் 108 முறை 'ஓம் முருகா போற்றி!' என்ற மந்திரத்தை எழுதுங்கள். இதனை எழுதுவதற்கு முன் ஒரு முறை

'ஓம் நமோ நாராயணா போற்றி!

ஓம் நமச்சிவாய போற்றி!

ஓம் விக்னேஸ்வரா போற்றி !

ஓம் முருகா போற்றி !

ஓம் சக்தியே போற்றி!

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி!

ஓம் தக்ஷிணாமூர்த்தியே போற்றி!

ஓம் குருவே போற்றி !..'

என்ற மந்திரத்தை உச்சரித்து கொண்டே எழுத வேண்டும். அதன் பிறகு உங்களது இஷ்ட தெய்வத்தின் நாமாவளியை, மந்திரத்தை எழுத தொடங்குங்கள்.‌ இந்த முறை உங்களது நோட்டுப் புத்தகம் தீருவதற்கும் முன் உங்களது கோரிக்கை நிறைவேறுவதை கண்டு மகிழுங்கள்.

இந்த பரிகாரம் எளிமையானது. ஆனால் வலிமையானது. ஏனெனில், அட்சரங்களுக்கு அதாவது எழுத்துகளுக்கு என இந்த பிரபஞ்சத்தில் தனி வலிமை உண்டு. எழுத்துகளுடன் உங்களது கோரிக்கையும் சமர்ப்பிக்கப்படுவதால்... இறை சக்தியும் பிரபஞ்ச சக்தியும் உங்களது வேண்டுகோளை கனிவுடன் பரிசீலித்து அதனை ஆசியாக வழங்கி உங்களை மகிழ்விக்கும்.

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீச்சமடைந்த கிரகங்களுக்குரிய வாழ்வியல் பரிகாரம்...?

2024-10-09 17:13:33
news-image

திடீர் அதிர்ஷ்டம் கிடைப்பதற்கான சூட்சமமான வழிபாடு...!!?

2024-10-08 17:13:01
news-image

இல்லங்களில் சகல ஐஸ்வரியங்களும் தங்குவதற்கான எளிய...

2024-10-07 15:06:17
news-image

சுக்கிர பகவானின் வலிமையை அதிகரித்துக் கொள்வதற்கான...

2024-10-05 21:38:45
news-image

அதிக நன்மைகளை அள்ளித் தரும் பாணலிங்கம்

2024-10-04 18:33:02
news-image

தீய சக்திகள் விலகுவதற்கான எளிய வழிமுறைகள்..?

2024-10-03 16:20:27
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கண்...

2024-10-03 17:10:09
news-image

பாலாரிஷ்ட தோஷத்தை அகற்றும் சப்த கன்னிமார்...

2024-10-01 16:59:14
news-image

ஒக்டோபர் மாத ராசி பலன்கள் 2024

2024-09-30 18:10:05
news-image

வருவாய், வருமானம் அதிகரிப்பதற்கான சூட்சம வழிமுறைகள்...!?

2024-09-30 16:53:33
news-image

கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வலிமையான...

2024-09-28 18:24:53
news-image

காரிய தடை விலகுவதற்கான எளிய பரிகாரம்

2024-09-26 18:39:17