இன்றைய சூழலில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வண்ணம் இருக்கிறது. மேலும் புற்றுநோய் தொடர்பாக மக்களிடையே இருக்கும் அச்சம் முழுமையாக நீங்கவில்லை என்றும், இது தொடர்பாக அறிமுகமாகி இருக்கும் நவீன மருத்துவ சிகிச்சைகள் குறித்து மக்களிடத்தில் முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றும் சுகாதாரத் துறை வல்லுனர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த தருணத்தில் பெருங்குடல் புற்றுநோய் உள்ளிட்ட சில புற்றுநோய் பாதிப்புகளுக்கு முழுமையான நிவாரணம் அளிக்கும் வகையில் ஹைப்பர் தெர்மிக் இன்ட்ராபெரிட்டோனியல் கீமோதெரபி எனும் நவீன சத்திர சிகிச்சை அறிமுகமாகி பலனளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சத்திர சிகிச்சை- கீமோதெரபி- ரேடியேஷன் தெரபி - டார்கெடட் தெரபி- புரோட்டான் தெரபி- போன்ற சிகிச்சைகள் பிரத்யேகமாகவும், ஒருங்கிணைந்தும் வழங்கப்பட்டு அவர்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அட்ரீனல் புற்றுநோய், அபென்டிக்ஸ் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய், இரைப்பை புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், கணைய புற்றுநோய், பெரிடோனியல் புற்றுநோய், மீசோதெலியோமா போன்ற புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால்... இவர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்க தற்போது ஹைப்பர் தெர்மிக் இன்ட்ராபெரிட்டோனியல் கீமோதெரபி என்ற நவீன சிகிச்சை சத்திர சிகிச்சை பலனளித்து வருகிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இத்தகைய சிகிச்சையின்போது புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்கு இரண்டு நிலையில் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. முதலில் புற்றுநோய் கட்டிகளை அகற்றும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அந்தக் கட்டிகள் அகற்றப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருக்கும் புற்றுநோய் செல்களை நீக்குவதற்காக சூடாக்கப்பட்ட கீமோதெரபி மருந்துகளை நேரடியாக செலுத்தி நிவாரணம் வழங்கப்படுகின்றன. இத்தகைய நவீன சிகிச்சை புற்றுநோய் பாதிப்புகளுக்கு பாரம்பரியமாக வழங்கப்படும் கீமோ தெரபியிலிருந்து கிடைக்கும் நிவாரணத்தை விட கூடுதலாக நிவாரணம் கிடைப்பதாகவும், இதனால் வாழ்நாள் நாற்பது சதவீதம் முதல் தொன்னூறு சதவீதம் வரை உயருகிறது என்றும் ஆய்வுகள் மூலம் சுட்டிக்காட்டப்படுகிறது. இதனால் இத்தகைய புற்றுநோய் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கும் ஹைப்பர் தெர்மிக் இன்ட்ராபெரிட்டோனியல் கீமோதெரபி சிகிச்சைக்கு நோயாளிகளிடையே வரவேற்பு கிடைத்திருக்கிறது.
- வைத்தியர் பாலாஜி
தொகுப்பு : அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM