நாணய நிதியத்தின் செயற்திட்டத்திலிருந்து முழுமையாக விலகவே மக்களாணை கோருகிறோம் ; ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகே

28 Aug, 2024 | 05:22 PM
image

(இராஜதுரை ஹஷான்)  

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தினால் நாட்டு மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே நாணய நிதியத்தின் செயற்திட்டத்தில் இருந்து முழுமையாக விலகுவதற்கான ஆணையை மக்களிடம் கோருகிறோம்.நாணய நிதியத்தினால் மீட்சிப் பெற்றுள்ளோம் என்று குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது என மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சட்டத்தரணி நுவன் போபகே தெரிவித்தார்.  

அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற 'ஜனாதிபதி வேட்பாளர்களின் கொள்கை வெளியீடு' தொடர்பான தெளிவுப்படுத்தலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது,  

சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் நாடு என்ற ரீதியில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளோம். நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை குறித்து மக்கள் மத்தியில் நல்லதொரு நிலைப்பாடு ஏதும் கிடையாது.

இதன் காரணமாகவே 1994 ஆம் ஆண்டு முதல் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

சட்டவாக்கத்துறை தொடர்பில் மக்கள் மத்தியில்  நிலைப்பாடு கிடையாது. மக்கள் எதிர்க்கிறார்கள். இதன் காரணமாகவே 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் விமர்சிக்கிறார்கள்.

நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை மற்றும் சட்டவாக்கத்துறை மீதான மக்களின் எதிர்ப்பு ஆகியவற்றை வைத்துக் கொண்டு எவ்வித பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது. 

எமது கொள்கையை கடந்த மாதம் 31 ஆம் திகதி வெளியிட்டோம். 2022 ஆம் ஆண்டு போராட்டக்களத்தில் மக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாகவே நாங்கள் எமது கொள்கை பிரகடனத்தை தயாரித்துள்ளோம்.

அரசியலுக்கும் மக்களுக்கும் இடையிலான ஒப்பந்தம் வலுவானதாக காணப்பட வேண்டும் என்பதை அடியொற்றியதாகவே நாங்கள் கொள்கை பிரகடனத்தை தயாரித்துள்ளோம். 

பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமை ஊடாக தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஏதும் செய்யலாம் என்ற நிலைமை காணப்படுகிறது. தம்மை தெரிவு செய்த மக்களுக்கு எதிரான சட்டமூலங்கள் கொண்டு வரப்படும் போது அதற்கும் இவர்கள் ஆதரவளித்துள்ளார்கள். 

பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமையில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன இதன் காரணமாகவே பங்குப்பற்றல் ஜனநாயக முறைமைக்கு அமைய செயற்படும் திட்டங்களை முன்வைத்துள்ளோம்.ஆகவே அரச நிர்வாக கட்டமைப்பில் பொதுமக்கள் பங்குப்பற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். 

 விவசாயம் குறித்து  ஆலோசனைகளை பெறும் தகைமை உள்ள விவசாயிகளை தவிர்த்து விவசாயத்துறையை மேம்படுத்த முடியாது. ஆகவே பங்குப்பற்றல் கட்டமைப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும். அத்துடன் கல்வி,சுகாதாரம்,அரச நிர்வாகம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் பங்குப்பற்றல் முறைமையை தோற்றுவிக்க வேண்டும் என்றார். 

கேள்வி – சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கை திட்டங்களை மறுசீரமைப்பதாகவும், மீளாய்வு செய்வதாகவும் குறிப்பிடுகின்றீர்கள்.இது நடைமுறைக்கு சாத்தியமாகுமா ? 

பதில் - சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை மீளாய்வு செய்வதாக நாங்கள் குறிப்பிடவில்லை.முழுமையாக விலகுவோம்.  நாட்டின் பிரச்சினைக்கு நாணய நிதியம்  ஒரு தீர்வாக அமையாது, வட்டி முதலாளியாகவே செயற்படுகிறது. நாட்டு மக்களின் வரியை கொள்ளையடித்து தம்மை வளப்படுத்திக் கொள்ளும் செயற்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தில் இருந்து விலகுவதற்கான ஆணையையே கோருகிறோம்.நாட்டு மக்கள் இன்று நெருக்கடிக்குள்ளாகியிருப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் பொறுப்புக் கூற வேண்டும். நாணய நிதியத்தினால் மீட்சிப் பெற்றுள்ளோம் என்று குறிப்பிடுவது மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடு 

கேள்வி – அரசியல் அனுபவமற்ற உங்களால் அரசை நிர்வகிக்க முடியுமா ?

பதில் - தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  45 ஆண்டுகளுக்கு மேல் அரசியல் அனுபவம் உள்ளவர்கள்.நாட்டுக்கு என்ன நேர்ந்துள்ளது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது தானே என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கை வெளியேறவேண்டும்...

2025-03-21 08:32:13
news-image

இன்றைய வானிலை

2025-03-21 06:18:19
news-image

எனக்கு பட்டலந்த குறித்து பேசுவதில் தற்போது...

2025-03-21 06:14:02
news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34