அல்சைமர் நோயால் ஆசிய நாட்டவர்கள் பலர் பாதிப்பு : விழிப்புணர்வு நடைபயணத்திற்கு அழைப்பு

28 Aug, 2024 | 05:11 PM
image

(வீ.பிரியதர்சன்)

அல்சைமர் நோயானது உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய பிரச்சினையாக காணப்படுகின்றது. இது 55 முதல் 60 மில்லியன் மக்களை இந்த நோய் பாதித்துள்ளதாக லங்கா அல்சைமர் மன்றத்தின் தலைவர் பேராசிரியர் ஷெஹான் வில்லியம்ஸ் தெரிவித்தார்.

ஆனால் இந்த நோய் மேற்குலகநாடுகளில் தான் காணப்படுவதாக நாம் எண்ணினாலும் ஆசிய நாடுகளில் தான் பலர் இந்த அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். 

உலக அல்சைமர்’ மாதத்தின் “நடைபயணம் ” தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தாமரைக் கோபுரத்தில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றும் போதே லங்கா அல்சைமர் மன்றத்தின் தலைவர் பேராசிரியர் ஷெஹான் வில்லியம்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அல்சைமர் நோய் மற்றும் ஏனைய வடிவிலான டிமென்ஷியா என்பன வயது முதிர்ச்சியுடன் பரவலாக அதிகரித்து வருகின்றன. 

பிராந்தியத்தில் வேகமாக அதிகரித்துவரும் வயதுமுதிர்ந்தவர்களின் எண்ணிக்கையை எதிர்கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை காணப்படுவதுடன், 2025ஆம் ஆண்டாகும் போது அரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் டிமொன்ஷியாவுடன் வாழ்வார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

உலக அல்சைமர் மாதமாக செப்டம்பெர் மாதமும், உலக அல்சைமர் தினமாக செப்டெம்பர் 21ஆம் திகதியும் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், அல்சைமர் நோய் சர்வதேச அமைப்பின் உறுப்பினரான லங்கா அல்சைமர் மன்றம் தொடர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.

ஒரு மாத கால விழிப்புணர்வு பிரசாரத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், நினைவாற்றல் இழப்பு மற்றும் ஆற்றல் குறைவு போன்ற அறிகுறிகளைக் கொண்ட ஒரு வகை டிமென்ஷியாவான அல்சைமர் நோய் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த கொழும்பின் அடையாளமாக விளங்கும் தாமைரைக் கோபுரக் கட்டடம் செப்டெம்பர்  மாதம் முதலாம் திகதி திகதி சிவப்பு நிறத்தில் ஒளிரவிடப்படவுள்ளது.

டிமென்ஷியா ஏற்படுத்துவதை காலதாமதப் படுத்தும் அல்லது தடுக்கும் உடல் ரீதியான மற்றும் உளரீதியான பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் லங்கா அல்சைமர் மன்றம் செப்டெம்பர் 07ஆம் திகதி பிற்பகல் 4.30 மணிக்கு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இருந்து “Run to Remember” என்ற 5 கிலோ மீற்றர் ஓட்ட நிகழ்வையும், செப்டெம்பர் 14ஆம் திகதி மு.ப 7.30 மணிக்கு கொழும்பு சினமன்ட் கிரான்ட் ஹோட்டலில் இருந்து என்ற நிகழ்வையும் ஏற்பாடு செய்துள்ளது.

லங்கா அல்சைமர் மன்றத்தின் முக்கிய சேவைகள் பெரும்பாலும் தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகின்றன. இவை விழிப்புணர்வை ஏற்படுத்தல், இடர் குறைப்பு, நினைவுப் பரிசோதனை மற்றும் மதிப்பீடு, செயற்பாட்டு மையத்தை நடத்துதல், பராமரிப்பார் குழுக்களை வலுப்படுத்தல், உதவிக்கான விசேட மையத்தை இயக்குதல், குழுக்களை ஆதரித்தல், ஹெல்ப்லைனை இயக்குதல், அடையாளம் காணக்கூடிய கை வளையல்களை வழங்குதல் மற்றும் உளநல ஆலோசனை வழங்கல் என்பனவும் அடங்கும்.

டிமென்ஷியாவுடன் வாழும் நபர்கள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களை இலக்கு வைத்து இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பிரதான அனுசரணையாளர்களான ஏடிஇசட் இன்ஷுரன்ஸ் புரோக்கர்ஸ் (பிரைவட்) லிமிடட், தாமரைக் கோபுரம், விஜயா நியூஸ்பேப்பர்ஸ், ஹாய் ஒன்லைன், தாஜ் சமுத்திரா ஹோட்டல், சினமன்ட் கிரான்ட் போன்ற பல்வேறு அனுசரணையாளர்களின் ஒத்துழைப்பினாலேயே அல்சைமர் மாதத்தின் செயற்பாடுகள் சாத்தியமாகியுள்ளன.

பாரிய தொற்றா நோயான இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து லங்கா அல்சைமர் மன்றத்தின் இவ்வருட செயற்பாடுகளுடன் இலங்கை சமூக மருத்துவர்களின் கல்லூரியும் இணைந்துள்ளது.

டிமென்ஷியா குறித்து கவனத்தில் கொள்ளாமல் இருத்தல் மற்றும் குறைவான கவனம் செலுத்தல் காரணமாக அனைத்து வயது முதிர்ந்தவர்களின் ஆரோக்கியமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் என்பதுடன், அது இலங்கையின் சுகாதாரத் துறைக்கு பாரிய சுமையாகவும் அமையலாம்.

டிமென்ஷியா மற்றும் அல்சைமருக்கு எதிராகச் செயற்பட வேண்டிய காலம் உருவாகியுள்ளது. அறிவின் ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலம், டிமென்ஷியாவின் எச்சரிக்கை அறிகுறிகளை அடையாளம் காணவும், ஆரம்பகால நோயறிதலை உறுதிப்படுத்தவும் மற்றும் நோயறிதலுக்குப் பின்னரான காலப்பகுதியில் அத்தியாவசிய ஆதரவை வழங்கவும் நாம் கூட்டாக இணைந்து பணியாற்றலாம். 

அல்சைமர் நோய் என்பது வயது முதிர்ச்சியின் ஒரு சாதாரண அங்கம் அல்ல, இது உடனடியான சிகிச்சைத் தீர்வைக் கொண்டிராவிட்டாலும், ஆபத்தைக் குறைத்து அதன் முன்னேற்றத்தைக் காலதாமதப்படுத்தலாம். டிமென்சிஷாவினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைய மேம்படுத்தி அதனை அர்த்தமுள்ளதாக்குவதற்கு லங்கா அல்சைமர் மன்றம் உதவுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ராப்டோமயோலிசிஸ் எனும் தசை திசு சிதைவு...

2024-10-01 16:55:55
news-image

எக்டோபிக் பீட்ஸ் எனும் சமச் சீரற்ற...

2024-09-30 17:00:57
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் தட்டையான பாத...

2024-09-26 16:56:32
news-image

சர்க்கரை நோயால் செவித்திறன் பாதிப்பு ஏற்படுமா..?

2024-09-25 16:21:32
news-image

மூட்டு பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2024-09-24 17:58:19
news-image

சர்கோபீனியா எனும் தசை சிதைவு பாதிப்பிற்குரிய...

2024-09-23 17:07:13
news-image

கல்லீரல் அழுத்த பாதிப்புக்கான சிகிச்சை

2024-09-23 16:39:09
news-image

இதய ரத்த நாள அடைப்பு பாதிப்பை...

2024-09-20 02:54:17
news-image

புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் 4...

2024-09-17 15:21:49
news-image

சிகெல்லா கேஸ்ட்ரோன்டிரிடிஸ் எனும் இரைப்பை குடல்...

2024-09-17 10:24:41
news-image

செப்சிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-09-14 16:45:08
news-image

பி சி ஓ டி பாதிப்பு...

2024-09-14 16:14:37