புதிய அவதாரம் எடுத்திருக்கும் நடிகை இனியா

28 Aug, 2024 | 05:01 PM
image

தமிழில் 2010ஆம் ஆண்டில் வெளியான 'பாடகசாலை' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தாலும், 2011ஆம் ஆண்டில் வெளியான 'வாகை சூடவா' எனும் படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை இனியா. அதன் பிறகு தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்னத்திரை தொடர்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகள், இணைய தொடர்கள் என பொழுதுபோக்கு அம்சத்தின் அனைத்து வடிவங்களிலும் தன்னுடைய பங்களிப்பை தொடர்ச்சியாக வழங்கி வரும் இனியா... திரையுலகில் சந்தை மதிப்புள்ள முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வருகிறார்.

அத்துடன் அனோரா ஆர்ட் ஸ்டுடியோ என் பெயரில் இந்தியா மற்றும் மலேசியாவில் ஆடை வடிவமைப்புக்கான பிரத்யேக நிறுவனத்தை தொடங்கி தொழில் முனைவோராகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர். இதனைத் தொடர்ந்து தற்போது ஆத்ரேயா டான்ஸ் ஸ்டுடியோ எனும் நடன பயிற்சி பள்ளியை தொடங்கி இருக்கிறார். இந்த பயிற்சி பள்ளியில் நடனம் பயின்ற மாணவ மாணவிகளை கொண்டு அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழா ஒன்றில் கலை நிகழ்ச்சிகளை வழங்கி அனைவரது கவனத்தையும் கவர்ந்தார்.

நடனத்தில் தேர்ச்சி பெற்ற நடிகை இனியா தற்போது தன்னுடைய நாட்டிய குருவான அருண் நந்தகுமார் என்பவருடன் இணைந்து இந்த நடன பயிற்சி பள்ளியை தொடங்கி இருக்கிறார். 'இதில் அனைத்து வகை நாட்டியங்களும், நடனங்களும் கற்பிக்கப்படுகின்றன' என பெருமிதத்துடன் கூறும் இனியா.. 'தொடர்ந்து கலை உலகின் அனைத்து வடிவங்களிலும் எம்முடைய பங்களிப்பை வழங்க தயாராக இருக்கிறேன்' என்றார்.

இதனிடையே இவர் தற்போது தமிழில் 'சீரன்' எனும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தனுஷ் இயக்கும் ' நிலவுக்கு என்...

2024-12-12 15:38:08
news-image

இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட 'அறிவான்'...

2024-12-12 15:38:42
news-image

ரட்சிதா மகாலட்சுமி நடிக்கும் 'எக்ஸ்ட்ரீம்' படத்தின்...

2024-12-11 17:37:18
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட நடிகர்...

2024-12-11 17:04:42
news-image

நடிகர் காளிதாஸ் ஜெயராம் திருமணம்: முதல்வர்...

2024-12-11 17:04:15
news-image

நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின்...

2024-12-10 18:41:08
news-image

பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கும் சீயான் விக்ரமின்...

2024-12-10 15:06:20
news-image

ஜார்ஜியாவில் லெஜண்ட் சரவணன்

2024-12-10 14:14:17
news-image

வசூலில் அதிரடி காட்டும் அல்லு அர்ஜுனின்...

2024-12-10 14:09:49
news-image

இறுதி கட்டத்தில் கௌதமன் நடிக்கும் '...

2024-12-10 14:10:21
news-image

விஜய் தேவரகொண்டா வெளியிட்ட நடிகை ராஷ்மிகா...

2024-12-10 14:10:48
news-image

இயக்குநர் பேரரசு தொடங்கி வைத்த 'சதுரங்க...

2024-12-10 12:14:23