ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொய் சொல்லும் தலைவர் அல்ல - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

Published By: Digital Desk 7

28 Aug, 2024 | 09:53 PM
image

நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு ஒளிமயமான நாளை உருவாக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணிக்கும் இந்த கடினமான பொருளாதார பாதையில் இன்னும் கொஞ்சம் தூரத்திற்கு செல்ல வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தப் பொருளாதாரப் போக்கை மாற்றினால், கடந்த காலத்தை விட அதிக சிரமங்களை நாம் சந்திக்க நேரிடும் என அமைச்சர் வலியுறுத்துகிறார்.

உடுகம்பொல பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை  (27) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது:

எமது நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும்  அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு ஜனாதிபதி பகிரங்க அழைப்பு விடுத்தார். இருவருமே கதைப்பதில் வல்லவர்கள். எனவே குதித்து இந்த சவாலை ஏற்றுக்கொள்வார்கள் என்று நாங்கள்  நினைத்தோம்.

எதிர்க்கட்சித் தலைவர் மிகவும் யோசித்து அந்த சவாலை ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால் அவர் ஜனாதிபதி வேட்பாளராக இந்த விவாதத்திற்கு வருவாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஒவ்வொரு முச்சந்தியிலும் நடைபாதையிலும் உண்மை விளம்பியபடி இருக்கும் அனுர குமார திஸாநாயக்க விடமிருந்து இன்னும் எந்த சலனமும் இல்லை. நமக்குத் தெரிந்த பழைய ஜே.வி.பி ஆட்கள் இப்படி இல்லை. ஒரு சவால் வரும்போது ஓடி வந்து அதை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் இப்போதைய ஜே.வி.பி. ஆட்களுக்கு அவ்வளவு துணிச்சலான முதுகெலும்பு இல்லை, அவர்களால் தற்பெருமை காட்டத்தான் முடியும்.

சஜித், அனுர போன்றவர்களின் பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படும்போது சாமானிய மக்களுக்கு சாப்பிடக் கூட நேரமில்லாமல் போகும். அவை இவ்வுலகில் நடைமுறைப்படுத்தக் கூடிய கொள்கைகள் அல்ல. அனுரவும் சஜித்தும் பழைய ஆட்கள்.

அதனால்தான் அநுரவின் அரசாங்கத்தின் நிதியமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி எலோன் மாஸ்க்கை போன்ற பொருளாதாரக் கொலையாளி என அழைக்கப்படுகிறார். உலகமே தெரியாத இந்த மாதிரி ஆட்களை வைத்து எப்படி நாட்டை கட்டியெழுப்ப முடியும்? ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது எப்படி?

உலகம் இப்போது நவீனமயமாக உள்ளது, எனவே பழைய உலகத்திற்கு ஏற்றவாறு திட்டங்களை உருவாக்குவது பயனற்றது. எந்நேரமும் பொய் சொல்லி மக்களை ஏமாற்றலாம் என எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. இம்முறை தேர்தல் முடிவுகளில் அவர்கள் எவ்வளவு பின்தங்கியிருக்கிறார்கள் என்பதை பார்க்க முடியும்.

ஜே.வி.பி 88/89 காலப் பகுதியில் பேருந்துகள் எரிக்கப்பட்டன, மின்மாற்றிகள் எரிக்கப்பட்டன, வங்கிகள் உடைக்கப்பட்டு அரசாங்க சொத்துக்கள் அழிக்கப்பட்டன. நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டிய பணத்தில் அவற்றை மீளக் கட்டியெழுப்ப செலவு செய்ய வேண்டியிருந்தது. எனவே, இந்த பொருளாதார நெருக்கடியில் ஜே.வி.பி.யும் பங்கு வகிக்கிறது. 75 ஆண்டுகால சாபம் பற்றி பேசும் ஜே.வி.பி, அது ஏற்படுத்திய பொருளாதார அழிவு பற்றி பேசவே இல்லை. எது சரி எது தவறு என்பதை எதிர்த்து நிற்க உங்களுக்கு வலுவான முதுகெலும்பு இருக்க வேண்டும். ஜே.வி.பிக்கோ அல்லது சஜித்துக்கோ அத்தகைய முதுகெலும்பு இல்லை.

அன்று ஜனாதிபதி கோட்டாபயவின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தில் இணையவிருக்கும் போது, எமது அமைச்சர்கள் சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எதிர்க் கட்சியினரைப் போன்று IMF பற்றி மக்களுக்குப் பலிகடா ஆக்கினார்கள் நெருக்கடியின் தொடக்கத்திலேயே நாம் சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்றிருந்தால், இந்த நாட்டு மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதை எதிர்த்த எம்மவர்கள் இப்போது வேறு முகமூடியை அணிந்து கொண்டு வேறொரு வேட்பாளரை ஜனாதிபதியாக்க வருகிறார்கள். இவர்களின் ஏமாற்று வித்தைகளில் மக்கள் விழ மாட்டார்கள்.

IMF ஒரு பலிகடா அல்ல, ஆனால் அது வளங்களை வழங்கும் கடவுளும் அல்ல. ஜனாதிபதியும் மற்றவர்களைப் போல பொய் சொல்லலாம் மற்றும் விசித்திரக் கதைகளை உருவாக்கலாம். ஆனால் அவர் பொய் சொல்லும் தலைவர் அல்ல. மக்கள் இன்னமும் அழுத்தத்தில் உள்ளனர் என்பதை அரசாங்கம் என்ற ரீதியில் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இந்தப் பயணம் மிகவும் கடினமானது.

ஆனால் இந்த கடினமான பாதையில் நீங்கள் இன்னும் கொஞ்சம் தூரம் சென்றால், உங்கள் குழந்தைக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும். இந்த பொருளாதாரப் போக்கை மாற்றினால், முன்னைய காலத்தை விட அதிக சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, ஜனாதிபதி பயணிக்கும்இந்த கடினமான பொருளாதாரப் பாதையில் இன்னும் சிறிது தூரம் செல்ல உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-22 06:14:23
news-image

யாழில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற...

2025-03-22 05:04:39
news-image

சர்வதேச பல்கலைக்கழகங்களை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை...

2025-03-22 04:49:45
news-image

அரசாங்கம் விடுவித்த 323கொள்கலன்களும் யாருக்கு சொந்தமானவை;...

2025-03-22 04:45:51
news-image

யாழ்.நூல் எரிப்பு தொடர்பில் குழு அமைத்து...

2025-03-22 04:43:41
news-image

நாடளாவிய ரீதியில் 400க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள்...

2025-03-22 04:39:00
news-image

நிவாரண பொதியில் உள்ளடங்குவது சமபோசாவா அல்லது...

2025-03-22 04:34:24
news-image

வட,கிழக்கின் தேவைகளை கண்டறிந்தே நிதியொதுக்கீட்டைச் செய்ய...

2025-03-22 04:27:18
news-image

மே மாதத்தில் 8,9ஆம் திகதிகளில் மாத்திரம்...

2025-03-22 04:24:35
news-image

மீண்டும் ஐ.தே.க. ஆட்சியமைப்பதற்காக தீவிரமாக செயற்படுகின்றோம்...

2025-03-22 04:15:02
news-image

பேருந்து நடத்துனர் - லண்டன் பெண்ணுக்கு...

2025-03-22 04:10:32
news-image

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸுக்கு...

2025-03-21 21:25:13