வடக்கிலும் கிழக்கிலும் குரல் கொடுப்பது போல சர்வதேச நாடுகளிலும் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் கோருகின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி அ. அமலநாயகி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்று புதன்கிழமை (28) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது.
குறித்த சங்கத்தின் தலைவி அமலராஜ் அமலநாயகி கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் 30 திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம், அதனை முன்னிட்டு திருகோணமலையில் சிவனாலயத்திற் முன்பாக இருந்து பேரணி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளோம். அதே வேளை வட மாகாணத்திலும் ஒரு பேரணியை மேற்கொள்ளவுள்ளோம்.
சர்வதேச நீதி பொறிமுறையை நாடியே நாங்கள் நீதி கேட்கும் பேரணி ஒன்றினை நடாத்தவுள்ளோம், இந்நிகழ்வில் அனைத்து தரப்பினரையும் அழைப்பு விடுக்கின்றோம்.
இதற்கான நீதி வேண்டி நாம் தொடர்ச்சியாக பேராடி வருகின்றோம்.
பொறுப்பு கூறும் தன்மை இலங்கை அரசாங்கத்திற்கு இல்லை என்பதால் சர்வதேசத்தை நாம் நாடி நிற்கின்றோம்.
முறையிட்ட எம்மைத் தான் தேடி தேடி விசாரணை செய்கின்றார்கள். அதனால் தான் ஐக்கிய நாடுகள் சபையை நாம் நாடி நிற்கின்றோம்.
ஜெனிவா கூட்டத் தொடர் எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ளது அதிலாவது எமது வலிகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்.
மரணம் என்பது எல்லோருக்கும் வரும் அது கண் முன்னே நடந்தால் பறவாயில்லை ஆனால் எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என வெளிக்கொணர வேண்டும்.
வடக்கிலும் கிழக்கிலும் குரல் கொடுப்பது போல சர்வதேச நாடுகளிலும் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் கோருகின்றோம்.
கேள்வி : தமிழர் ஒருவர் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ளார் அவருக்கு உங்களது ஆதரவு எப்படி இருக்கும்?
இதுவரை தமிழர் ஒருவர் வேட்பாளராக போட்டியிடாமல் இருந்தது. எமது ஆதரவு யாருக்கு என்று பொதுவாக எம்மால் வெளியிட முடியாது.
யார் ஜனாதிபதியானாலும் எமது கோரிக்கைகளுக்கு தீர்வு தர வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM