"நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி" எனும் தொனிப்பொருளில் நிலத்தடி நீர் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கண்காட்சி நல்லூர் ஆலய முன்றலில் உள்ள யாழ். மாநகர சபை தீயணைப்பு படை வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தின் வட மாகாண நீர் பாதுகாப்பு செயற்றிட்டம் (WASPAR), இளைய நீர்த்துறையாளர் வட்டம் (YWP) ஆகியவற்றின் ஏற்பாட்டில் வட மாகாண நீர்ப்பாசன திணைக்களம், நீர்வள சபை உள்ளிட்ட பல்வேறு நீர் சார்ந்த அரச திணைக்களங்களும் அமைப்புகளும் இணைந்து இக்கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.
எதிர்வரும் 4ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த கண்காட்சியில் நீர் சார்ந்த ஆய்வு விபரங்கள், விஞ்ஞான விளக்கங்கள், கலந்துரையாடல்கள், விளையாட்டுகள், இளையோர்கள் - சிறார்களுக்கான பரிசுப் போட்டிகள் என பல வகையான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
நல்லூர் திருவிழாவுக்கு வரும் பொதுமக்கள் வட மாகாண நிலத்தடி நீர்வளத்தின்பால் கவனம் செலுத்தி இந்த கண்காட்சியை பார்வையிட்டு நீர் சார்ந்த மேலும் பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ளுமாறும் இதன் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM