விபத்தினை ஏற்படுத்தி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை காயப்படுத்தி நாட்டை விட்டுத் தப்பிச் சென்று துபாயில் தலைமறைவாகியிருந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் மகனான நதீன் பாஷிக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (27) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயில் தலைமறைவாகவுள்ள ஷிரான் பாஷிக் என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் மகனான 22 வயதுடைய நதீன் பாஷிக் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் காரில் பயணித்த நதீன் பாஷிக்கை சுற்றிவளைத்துப் பிடிக்க முயன்றுள்ளனர்.
இதன்போது, காரில் பயணித்த சந்தேக நபரான நதீன் பாஷிக் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பயணித்த மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளாகி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த விபத்தின் போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
பின்னர், தப்பிச் சென்ற நதீன் பாஷிக்கை கைது செய்ய கல்கிசை நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, சந்தேக நபரான நதீன் பாஷிக் துபாயிற்கு தப்பிச் சென்று நேற்று (27) மீண்டும் நாடு திரும்பியுள்ள நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை முயற்சி மற்றும் விபத்தினை ஏற்படுத்தி ஒருவரை காயப்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நதீன் பாஷிக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM