(நா.தனுஜா)
தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பொருளாதார செயற்திட்டத்தை இடைநிறுத்துவதானது சுமார் இருவருடங்களுக்கு முன்னர் நாடு முகங்கொடுத்த பொருளாதார, சமூக நெருக்கடி மீண்டும் தோன்றுவதற்கே வழிகோலும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற இலங்கை தொழில்வல்லுனர் அமைப்பின் 37 ஆவது வருடாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் பொருளாதார மீட்சியை இலக்காகக்கொண்டு தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்பு செயற்முறையானது நடுத்தர - நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதது எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு குறுங்கால மறுசீரமைப்புக்கள் கடினமானவையாக இருப்பினும், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இந்த மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்கு சகல தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது நிலைபேறான வளர்ச்சியை நோக்கிய பாதையில் நாட்டை நகர்த்திச்செல்வதற்கு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் நாட்டின் நிகழ்கால மற்றும் எதிர்கால சுபீட்சத்துக்கு நிதி மற்றும் கடன் ஸ்திரத்தன்iயை மீள அடைந்துகொள்ளவேண்டும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM