மன்னார் உயிலங்குளம் வீதியில் கோர விபத்து-  மூவர் படுகாயம்

Published By: Vishnu

28 Aug, 2024 | 03:09 AM
image

மன்னார் உயிலங்குளம் பகுதியில் பட்டாரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 03 பேர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தானது செவ்வாய்க்கிழமை (27)மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மன்னார்- மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் பகுதியில் நேர் எதிரே வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாகியதில்  மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா வாகனத்தில் பயணித்தவர்கள் இவ்வாறு படு காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களை உடனடியாக முருங்கன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் காயமடைந்தவர்கள்  மன்னார்  பகுதியைச்  சேர்ந்த இருவரும் மாந்தை மேற்கு பகுதியை சேர்ந்த ஒருவரும் என்று தெரிய வருகிறது.

 இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை உயிலங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதான எதிர்க்கட்சி தலைவர் வேட்பாளரா? பிரதமர்...

2024-10-13 12:12:07
news-image

விசேட தேவையுடைய சிறுவர்களை சித்திரவதை செய்த...

2024-10-13 12:00:53
news-image

பொறுப்புக்கூறலுக்கு உள்நாட்டு பொறிமுறை - உயிர்த்த...

2024-10-13 12:05:06
news-image

பிரிக்ஸ் அமைப்பில் இணைகிறது இலங்கை :...

2024-10-13 11:40:10
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சிவராம்...

2024-10-13 11:24:35
news-image

ஹுங்கமவில் கண்ணாடிக் குவியலுக்கு அடியில் விழுந்து...

2024-10-13 11:19:29
news-image

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை...

2024-10-13 11:03:13
news-image

ஒற்றுமையை விரும்பும் தமிழ் மக்களின் தெரிவு...

2024-10-13 11:23:53
news-image

லெபனானில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் -...

2024-10-13 11:04:44
news-image

அநுர - ரணில் இடையே வித்தியாசமில்லை...

2024-10-13 10:30:26
news-image

196 ஆசனங்களுக்கு 8388 வேட்பாளர்கள் போட்டி...

2024-10-13 10:13:12
news-image

வடமராட்சியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு...

2024-10-13 10:50:56