2024 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (கூட்டாதன முகாமை) ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரத்தின் பிரதான திட்டத்திற்கமைய, சராசரி நில அளவின் 51 சதவீதம் வதிவிடப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதன்மூலம் கூட்டாதன அபிவிருத்திக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, கூட்டாதனப் பங்குகளின் உரிமையாளர்களுக்கும், வாடகைதாரர்களுக்கு இடையூறுகளின் வசிப்பதற்கான வாய்ப்புக்களை வழங்கி, சர்வதேச தரநியமங்களுடன் கூடிய பொது வாழ்வசதிகள் மற்றும் பொது அம்சங்களைப் பேணிச் செல்வதற்கு ஒழுங்குபடுத்தல் நிறுவனமொன்றை தாபித்தல் மற்றும் ஒழுங்குவிதிகளை விதிக்க வேண்டியுள்ளது.
2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்புத் துறைமுகப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய 2394/68 ஆம் இலக்க 2024.07.26 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 2024 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (கூட்டாதன முகாமை) ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM