இலங்கை பழங்குடியின மக்களின் உரிமைகள் தொடர்பான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக முன்னாள் நிதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாராம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக 2024.05.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதில் அனைத்துத் தரப்பினர்களின் பங்கேற்புடன் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த கருத்தாக்கப் பத்திரத்தை தொடர்ந்து பகுப்பாய்வு செய்வது பொருத்தமானதெனத் தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய, காணி, வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் மற்றும் நிதி போன்ற விடயதானங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அமைச்சுக்களின் அதிகாரிகள், சட்டமா அதிபர் அலுவலகத்தின் அதிகாரிகள், சட்ட வரைஞர் அலுவலகத்தின் அதிகாரிகள் உள்ளடங்கலாக, ஏற்புடைய துறைசார் ஆர்வலர்களுடன் பங்கேற்புடனும், பிரதமரின் செயலாளர் தலைமையில் சில கலந்துரையாடல் சுற்றுக்களை நடாத்தி, அடிப்படை சட்டமூல வரைபு மேம்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த அடிப்படை சட்டமூல வரைபை அடிப்படையாகக் கொண்டு சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்களும், புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM