அனைவருக்கும் தங்களின் தகுதி மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பணம் என்பது அவசியமாகிறது. தன வரவு குறித்து இணைய தளங்களில் ஜோதிட ஆசான்களும், ஆன்மீக முன்னோர்களும் எத்தனை விதமான பயனுள்ள குறிப்புகளை வழங்கினாலும் அதனை செய்து தங்களது தனத்தை அதிகரித்துக் கொள்வதில் தான் மக்களது கவனம் இருக்கிறது. இந்த நிலையில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வீட்டில் செல்வம் நிலையாக நின்று தங்கி முன்னேற்றத்தை அளிப்பதற்கான எளிய வழிமுறைகளை பரிகாரங்களாக முன்மொழிந்திருக்கிறார்கள்.
எம்முடைய ஜாதகத்தில் பண வரவை குறிப்பது இரண்டாம் இடம் ஆகும். அத்துடன் இரண்டாம் இடம் என்பது வாக்கு மற்றும் குடும்ப ஸ்தானத்தையும் குறிக்கும் என்பதால் நீங்கள் உங்களின் வாக்கு அதாவது பேச்சினை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். உதாரணத்திற்கு வீட்டிலிருந்து புறப்படும் போதோ அல்லது வீட்டிற்கு திரும்பும் போதோ நல்ல வார்த்தைகளை தான் பேச வேண்டும்.
இதனை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் தவறான சொல்லையோ அல்லது அதிர்ஷ்டம் தராத சொற்களையோ அல்லது எதிர்மறையான வார்த்தைகளையோ பேசினாலும், அதனைத் தொடர்ந்தாலும் உங்களுக்கு வாக்கு தோஷம் ஏற்பட்டு இதனால் பண வரவில் சூட்சமமான தடை ஏற்படும்.
இன்று தருகிறேன் என்று ஒப்புக்கொண்டவர்கள் கூட இறுதி நேரத்தில் பின்வாங்கி விடுவார்கள் காரணம் உங்களுடைய அர்த்தமற்ற எதிர்மறையான பேச்சுக்கள் தான். அதனால் நல்ல வார்த்தைகளை பேசுங்கள். அதனையே தொடருங்கள். உங்களுக்கு வரவேண்டிய தன வரவு சரியான நேரத்தில் வந்தடையும்.
மேலும் எம்முடைய இல்லத்தரசிகள் கடந்த தசாப்தங்களில் சேலை கட்டிய போது அதன் முந்தானையில் ஒரு ரூபாய் நாணயத்தை முடிச்சிட்டு வைத்திருப்பர். அதனால் குடும்பத்தில் எந்த நேரமும் குறைந்த அளவிற்காவது தனம் தங்கி இருக்கும். ஆனால் இன்றைய திகதியில் நாகரீகம் கருதி அல்லது சௌகரியம் கருதி பெண்கள் சேலையை உடுத்துவதில்லை.
அதற்க்கு மாற்றாக நைட்டி எனும் ஒரு ஆடையை பாவிக்கிறார்கள். இதன் காரணமாக எம்முடைய முன்னோர்கள் இன்றைய இளம் தலைமுறை பெண்மணிகளுக்கு வெள்ளிக்கிழமைகளில் மட்டும் சேலையை உடுத்தி அந்த சேலையின் முந்தானையில் ஒரே ஒரு ரூபாய் நாணயத்தை முடிச்சிட்டு வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களது வீட்டிற்கு மகாலட்சுமி அம்சம் அதிகரித்து தன வரவை மேம்படுத்தும்.
மேலும் நீங்கள் சேலை அணிந்து கொண்டாலும் அல்லது நைட்டி எனும் நவீன உடையை அணிந்து கொண்டாலும் தன வரவு என்பது தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று விரும்பினால் உங்களது பூஜை அறையில் தீபத்திற்கு அடிப்பகுதியில் மூன்று என்ற எண்ணிக்கையிலோ அல்லது பதினொன்று என்ற எண்ணிக்கையிலோ கல்லுப்பினை வைத்து விட வேண்டும்.
அதனுடன் ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்து விட வேண்டும். இதன் பிறகு நீங்கள் வாரம் முழுவதும் தன வரவு அதிகமாக வேண்டும் என தீபத்தின் முன் இறைவனிடமும், இந்த பிரபஞ்சத்திடமும் கோரிக்கை வைக்கும் போது, உங்களது வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டு தன வரவு கிடைப்பதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM