மூளையில் ஏற்படும் கொலாய்டு நீர்க்கட்டி பாதிப்பிற்கான நவீன சத்திர சிகிச்சை

Published By: Digital Desk 7

27 Aug, 2024 | 05:42 PM
image

எம்மில் சிலருக்கு தலைவலி ஏற்படும். இதற்காக பல்வேறு வகையினதான மருந்தியல் சிகிச்சைகளை மேற்கொண்ட பிறகும் முழுமையான நிவாரணம் கிடைத்திருக்காது. இந்நிலையில் வைத்திய நிபுணர்கள் இத்தகைய அறிகுறிக்காக பிரத்யேக மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள பரிந்துரை செய்கிறார்கள்.

இதன் முடிவின் அடிப்படையில் சிலருக்கு மூளை பகுதியில் தீங்கு விளைவிக்காத நீர்க்கட்டி பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இதனை மருத்துவ மொழியில் கொலாய்டு நீர்க்கட்டி என குறிப்பிடுவர். 

பொதுவாக எம்முடைய மூளைப் பகுதியில் அமைய பெற்றிருக்கும் செரிப்ரல் ஸ்பைனல் திரவம் இயல்பான முறையில் மூளை முழுவதும் சுழற்சி நடைபெறும். இந்த சுழற்சியில் ஏதேனும் ஒரு பகுதியில் தடை ஏற்பட்டாலோ அல்லது மூளைப் பகுதியில் உள்ள மூன்றாவது வென்ட்ரிக்கிள் எனப்படும் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலோ இத்தகைய கொலாய்டு நீர்க்கட்டி உண்டாகும்.

இத்தகைய நீர்க்கட்டி திரவங்களால் நிரம்பிய நீர்க்கட்டி என குறிப்பிடுவார்கள். இதில் பெரும்பாலும் மியூசின், சுத்திகரிக்கப்படாத அல்லது பயன்படுத்தப்படாத குருதி, கொலஸ்ட்ரால், இரும்பு சத்து அயனிகள் ஆகியவற்றை கொண்டிருக்கும்.

இது பெரும்பாலும் அறிகுறிகளை வெளிப்படுத்தாது. ஆனாலும் சிலருக்கு தலைவலி, தலைச்சுற்றல், நினைவுத் திறனில் பாதிப்பு ஆகிய அறிகுறிகளை ஏற்படுத்தும். வெகு சிலருக்கே இத்தகைய நீர்க்கட்டியினால் மரணம் ஏற்படக்கூடும்.

பெரும்பாலும் தலைவலி பாதிப்பிற்காக மூளை பகுதியை சிடி ஸ்கேன் அல்லது எம் ஆர் ஐ ஸ்கேன் எனும் பரிசோதனையை மேற்கொள்ளும்போது தான் இத்தகைய நீர்க் கட்டியை கண்டறிகிறார்கள்.‌

இத்தகைய நீர்க் கட்டியை வைத்திய நிபுணர்கள் கண்டறிந்த உடன் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய சத்திர சிகிச்சையை குறிப்பாக நுண் துளை சத்திர சிகிச்சையை மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள். இத்தகைய சத்திர சிகிச்சையின் போது வைத்திய நிபுணர்கள் மூளையின் குறிப்பிட்ட பகுதிக்குள் இருக்கும் இந்த நீர்க் கட்டியை முழுவதுமாக அகற்றி விடுவார்கள்.

இதற்கு தற்போது எண்டோஸ்கோபிக் சர்ஜேரி எனும் சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை அளிக்கிறார்கள். மேலும் சிலருக்கு கிரானியோட்டமி மற்றும் ஸ்டீரியோடாக்டிக் அஸ்பிரேசன் ஆகிய சத்திர சிகிச்சைகள் மூலமும் இதற்கு நிவாரணம் அளிக்கிறார்கள்.

வைத்தியர் வேணி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாக்டூரல் மஸுல் கிராம்ப்ஸ் எனும் இரவு...

2025-02-13 15:44:09
news-image

ஸ்பொண்டிலோலிஸ்டெஸிஸ் எனும் முதுகெலும்பில் ஏற்படும் பாதிப்பிற்கான...

2025-02-12 17:05:03
news-image

14,0000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள், குடும்பங்களுக்கு...

2025-02-12 14:15:17
news-image

பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை...

2025-02-11 16:32:15
news-image

நுரையீரலில் ஏற்படும் பாதிப்பை கண்டறியும் நவீன...

2025-02-10 16:08:05
news-image

பெர்குடேனியஸ் ட்ரான்ஸ்லுமினல் கரோனரி ஓஞ்சியோபிளாஸ்ரி எனும்...

2025-02-08 16:28:44
news-image

மீண்டும் மீண்டும் ஏ என் ஏ...

2025-02-08 11:08:22
news-image

தனி பிரிவாக வளர்ச்சி அடைந்து வரும்...

2025-02-06 18:23:31
news-image

புளித்த ஏப்பம் எனும் பாதிப்பிற்கான நிவாரண...

2025-02-05 17:36:36
news-image

புளூரல் எஃபியூஸன் எனும் நுரையீரலில் ஏற்படும்...

2025-02-03 16:01:24
news-image

தோள்பட்டை வலிக்கு உரிய நிவாரண சிகிச்சை

2025-02-01 20:35:14
news-image

யூஸ்டாச்சியன் குழாய் செயலிழப்பு எனும் காதில்...

2025-01-30 14:26:30