2025 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படவுள்ள பாடநூல்களை அச்சிடுவதற்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்குத் தேவையான பாடசாலைப் பாடநூல்களை அச்சிடுவதற்காக 317 வகையான பாடநூல்களில் 71 வகையான பாடநூல்களை அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திடமிருந்து அச்சிடுவதற்காக 2024.04.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பாடநூல்களை விநியோகிப்பதற்குத் தேவையான எஞ்சியுள்ள 246 பாடநூல் வகைகளை அச்சிடுவதற்காக தேசிய போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளது.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய, விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களை வழங்கியுள்ள குறைந்த விலைமனுவை சமர்ப்பித்துள்ள 24 அச்சகங்களுக்கு, 1, 6 மற்றும் 10 ஆம் தரங்கள் தவிர்ந்த ஏனைய தரங்களுக்கான பாடநூல்களை அச்சிடுவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM