மனித உரிமை குற்றச்சாட்டு, யுத்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட எவரையும் எனது அரசாங்கம் தண்டிக்காது - அனுரகுமார

Published By: Rajeeban

27 Aug, 2024 | 05:32 PM
image

இலங்கையின் 26 வருடகால உள்நாட்டு யுத்தத்தின்போது யுத்தகுற்றச்சாட்டுகள் மனித உரிமை குற்றச்சாட்டுகளிற்குள்ளாகியுள்ள எவரையும் தனது நிர்வாகம் தண்டிக்க முயலாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்

அசோசியேட்டட் பிரஸிற்கு வழங்கியுள்ள  பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், அதன் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திசநாயக்க 2022 இல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியிலிருந்து அகற்றுவதற்கு காரணமான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களிற்கு  தான் சேவையாற்றுவதாக தெரிவிக்கின்றார்.

எனது நாட்டு மக்கள் மாற்றங்கள் குறித்து பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர் என அவர் அசோசியேட்டட் பிரசிற்கு தெரிவித்துள்ளார்.

அவர்கள் மாற்றத்தினை விரும்புகின்றனர் நாங்கள் அந்த மாற்றத்தின் முகவர்கள் என குறிப்பிட்டுள்ள அவர் ஏனைய அனைத்து வேட்பாளர்களும் பழைய ,தோல்வியடைந்த,பாரம்பரிய முறையின் முகவர்கள் என தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியை அகற்றுவதற்கு அப்பால் திட்டங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை,மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர்களாக அவர்கள் காணப்படவில்லை,இதன் காரணமாக மாற்றங்கள் குறித்த மக்களின் பெரும் விருப்பம் சாத்தியமாகவில்லை என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விரும்பும் மாற்றமாக எனது  நிர்வாகம் காணப்படும்,மக்கள் ஊழல் அற்ற சமூகத்தி;ல் சிறப்பான பொருளாதாரத்தை  எதிர்பார்க்கின்றார்கள் என  அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் வளங்களை தேசிய மயப்படுத்தும் கொள்கையை தனது கட்சி நீண்டகாலமாக கொண்டுள்ள போதிலும்,நாங்கள் பொருளாதார சுதந்திரம் வெளிநாட்டு வர்த்தகம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்கின்றோம் என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மீதான சுமைகளை குறைப்பதற்காக சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் அதேவேளை சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையை தொடர்ந்து முன்னெடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடு நிதிரீதியாக வீழ்;ச்சியடைந்து  காணபட்டதாலேயே நாங்கள் சர்வதேச நாணயநிதியத்துடன் உடன்படிக்கையை செய்தோம் என்பதால் நாங்கள் அதிலிருந்து வெளியேற முடியாது என தெரிவித்துள்ள அனுரகுமார திசநாயக்க ஆனால் மாற்றீடுகள் இருப்பதாக நாங்கள் நம்புகின்றோம்,என குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையை தொடர்ந்து முன்னெடுக்கும்போது மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 26 வருட ஈவிரக்கமற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது மனித உரிமை மீறல்கள் - யுத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட எவரையும் தனது நிர்வாகம்  தண்டிக்க முயலாது என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து தனது அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ள முயலும் என தெரிவித்துள்ள அனுரகுமார திசநாயக்க ,பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதற்கு தனது அரசாங்கம் முயலும் எனவும் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறல் விடயம் பற்றி தெரிவிப்பதென்றால்,பழிவாங்கும் விதத்தில் அது இடம்பெறக்கூடாது,எவரையும் குற்றம்சாட்டும் விதத்தில் அது இடம்பெறக்கூடாது,உண்மையை கண்டறியும் விதத்திலேயே அது முன்னெடுக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ள அனுரகுமாரதிசநாயக்க,பாதிக்கப்பட்டவர்கள் கூட எவரும் தண்டிக்கப்படவேண்டும் என விரும்பவில்லை,அவர்கள் என்ன நடந்தது என அறியவே விரும்புகின்றார்கள் என தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரத்தில் ஆறு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-02-18 15:51:52
news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-02-18 15:23:00
news-image

“உங்களுடைய தீர்மானம் பல வருடங்களாக காத்திருக்கும்...

2025-02-18 15:20:25
news-image

கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்...

2025-02-18 15:05:00
news-image

வெல்லவாய - தணமல்வில பிரதான வீதியில்...

2025-02-18 14:31:12
news-image

பாகிஸ்தானில் பயிற்சியை முடித்துக்கொண்டு இலங்கையை வந்தடைந்தது...

2025-02-18 15:31:41
news-image

மே மாதம் வரை வெப்பநிலை தொடரும்...

2025-02-18 13:40:43
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு விசாரணை...

2025-02-18 13:06:16
news-image

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் மு.கா...

2025-02-18 13:06:56
news-image

ஊடகவியலாளர்களின் உறுதியான பாதுகாவலராக திகழ்ந்தவர் சீதா...

2025-02-18 14:42:33
news-image

நீர்கொழும்பில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-02-18 12:46:23
news-image

ஐஸ், கஞ்சா, கசிப்பு உள்ளிட்ட போதைப்பொருட்களுடன்...

2025-02-18 12:47:54