கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவரொருவர் திடீரென சுகயீமுற்றதையடுத்து விரைந்துசெயற்பட்ட இலங்கை கடற்படையினர் மீட்டு வந்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பேருவளை மீன்பிடிதுறை முகத்தில் இருந்து கடந்த 6 ஆம் திகதி கடலில் தங்கி மீன்பிடிப்பதற்காக சென்ற மீனவரொருவர் கடும் இருதய நோயால் திடீரென பாதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மீனவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மீன்பிடித் திணைக்ளகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அத் திணைக்களம் இலங்கை கடற்படைக்கு சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தது.

இந்நிலையில் விரைந்துசெயற்பட்ட இலங்கை கடற்படையினர் மீனவரை மீட்டுவந்து காலி கராப்பிட்டிய வைத்திசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.