மறுசீரமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த 200 மில்லியன் ; உலக வங்கி ஒத்துழைப்பு என்கிறது அரசாங்கம்!

27 Aug, 2024 | 09:32 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக சுமார் 200 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.  

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் மாநாடு இன்று  செவ்வாய்கிழமை (27) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதிவசதிக்கு இணையாக அபிவிருத்திக் கொள்கை நிதியிடல் வேலைத்திட்டத்தின் மூலம் உலக வங்கி இலங்கையில் நீடித்த மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலுக்காக ஒத்துழைப்பு வழங்குகின்றது.

இவ்வேலைத்திட்டம் இரண்டு ஆண்டு வேலைத்திட்டமாக அமைவதுடன், அதன் முதலாம் கட்டம் 2023 ஆம் ஆண்டில் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அபிவிருத்திக் கொள்கை நிதியிடல் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் அரசின் மறுசீரமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக சுமார் 200 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க, குறித்த நிதிவசதியைப் பெற்றுக் கொள்வதற்குரிய உலக வங்கிக் குழுமத்தின் சர்வதேச அபிவிருத்திக்கான இணை நிறுவனத்துடன் குறித்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.

   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வன்னியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...

2024-10-10 20:25:01
news-image

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை - கே.ரீ.குருசுவாமி

2024-10-10 20:25:53
news-image

கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் காணியை குறுகிய...

2024-10-10 19:29:28
news-image

பொதுத்தேர்தலில்  11 ஆசனங்களை பெறுவோம் -...

2024-10-10 19:07:53
news-image

முதியவர் கழுத்து நெரித்து கொலை ;...

2024-10-10 20:06:05
news-image

யாழ். மாவட்டத்தில் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடவுள்ள...

2024-10-10 18:53:41
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் 

2024-10-10 18:55:08
news-image

மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2024-10-10 21:09:34
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பலஸ்தீனத் தூதுவர்  

2024-10-10 17:38:30
news-image

துருக்கித் தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும்...

2024-10-10 17:33:57
news-image

வன்னியில் தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல்

2024-10-10 17:34:41
news-image

கண்டியில் தேசிய மக்கள் சக்தி வேட்பு...

2024-10-10 21:05:05