கூட்டுறவு மதிப்புச் சங்கிலி மற்றும் விநியோகச் சங்கிலி செயன்முறைகளை வலுப்படுத்த SDB வங்கி - மத்திய மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து

27 Aug, 2024 | 02:20 PM
image

 கூட்டுறவு இயக்கத்தின் ஊடாக கிராமிய அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாக, SDB வங்கியானது மத்திய மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்துடன் ஒரு கூட்டாண்மையை ஏற்படுத்திள்ளது. இந்தக் கூட்டாண்மையானது, கூட்டுறவு மதிப்புச் சங்கிலி மற்றும் விநியோகச் சங்கிலி செயன்முறைகளை வலுப்படுத்துவதையும், பாரம்பரிய விவசாயத்தை நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைப்பதன் மூலம் குடிசைத் கைத்தொழில்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு ஏற்ற வகையில் புத்தாக்கமான உணவுப் பொருட்களை உருவாக்குவதே இதன் குறிக்கோளாகும்.

நிதி ஆதரவு, தொழில் முனைவோர் மேம்பாடு, நிதி ஆலோசனை சேவைகள், பயிற்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் கூட்டுறவு சங்கங்களுக்கு SDB வங்கி ஆதரவளிக்கும். இந்த திட்டங்கள் நிலைபேறான ஆய்வுகள் மூலம் கண்காணிக்கப்படுவதோடு, இது நிலைபேறானதன்மை மற்றும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் விளைவுகளை உறுதி செய்யும். 

அண்மையில் மத்திய மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வில், 12 கூட்டுறவுச் சங்கங்களின் முயற்சியின் கீழ், வீட்டில் தயாரிக்கப்பட்ட சவர்க்காரம், பலாப்பழ பிஸ்கட், பலாப்பழமாவு, பலாப்பழ விதை மாவு, கித்துல் மாவு, கித்துல் பாணி, கித்துல் கருப்பட்டி, சோயா கலந்த உலர்த்திய காளானுடன் தக்காளிச்சாறு, காயவைத்த மரக்கறி பொதிகள் உள்ளிட்ட பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. 

இந்தக் கூட்டாண்மையின் கீழ் ‘பசுமை கிராமம்’ எனும் மற்றொரு தனித்துவமான திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கூட்டுறவு வலையமைப்பு மூலம் நிலைபேறான சுற்றுலாவை மேம்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. நானுஓயா கூட்டுறவு விற்பனை நிலையம் போன்ற சுற்றுலாத் தலங்களில் உள்ள தெரிவு செய்யப்பட்ட கூட்டுறவு விற்பனை நிலையங்கள், முழுமையான வசதிகளுடன் கூடிய திறந்த சமையலறைகள் மற்றும் உணவருந்தும் பகுதிகள் மூலம் மேம்படுத்தப்படும். சுற்றுலாப் பயணிகள் புத்தம் புதிய, சேதன விவசாய விளைபொருட்களை கொள்வனவு செய்வதற்கும், சொந்தமாக உணவைத் தயாரிப்பதற்கும் இது வாய்ப்பை வழங்கும். இதன் மூலம் உள்ளூர் கூட்டுறவு நிலையங்களுக்கு ஆதரவளிக்கப்படுவதோடு, சுற்றுலா அனுபவமும் மேம்படுத்தப்படும். உயிரியல் வாயு தொழில்நுட்பம் மற்றும் மீள்சுழற்சி நடைமுறைகளைப் பயன்படுத்தி பயனுள்ள கழிவு முகாமைத்துவ தொகுதிகளை செயற்படுத்துவதன் மூலம் பசுமை கொள்கையை இவ்விற்பனை நிலையங்கள் கடைப்பிடிக்கும். 

பொருளாதார அபிவிருத்தியின் முக்கிய அங்கமாக கூட்டுறவு அமைப்புகளை மேம்படுத்துவதற்கு SDB வங்கி உறுதி பூண்டுள்ளது. அத்துடன், இந்த மூலோபாய கூட்டாண்மைகள் மற்றும் புத்தாக்க வேலைத்திட்டங்களின் ஊடாக, சமூகங்களை வலுவூட்டல், தொழில்முயற்சியை ஊக்குவித்தல், இலங்கை முழுவதும் நிலைபேறான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றை வங்கி இலக்காகக் கொண்டுள்ளது. 

SDB வங்கி பற்றி:

ஒவ்வொரு தனிநபரின் தேவைகளுக்கும் ஏற்ப வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட, விரிவான ஆதரவை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட எதிர்காலத்துடன் இணைந்து பயணிக்க தயாராக உள்ள SDB வங்கியானது கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான சபையில் பட்டியலிடப்பட்டுள்ளதும் BB+(lka) பிட்ச் மதிப்பீட்டைக் கொண்ட இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்பட்ட அனுமதிப்பத்திரம் பெற்ற விசேட வங்கியாகும். நாடளாவிய ரீதியில் உள்ள 94 கிளை வலையமைப்பின் ஊடாக நாடு முழுவதும் உள்ள அதன் சில்லறை வணிக சிறிய நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் கூட்டுறவு மற்றும் வணிக வங்கி வாடிக்கையாளர்களுக்கு விரிவான நிதிச் சேவைகளை SDB வங்கி வழங்குகிறது. SDB வங்கியின் நெறிமுறைகளில் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை ஆகிய ESG கொள்கைகள் ஆழமாகப் பதிந்துள்ளதோடு நிலைபேறான நடைமுறைகள் மூலம் உள்ளூர் சமூகங்கள் மற்றும் வணிகங்களை மேம்படுத்துவதில் உறுதியான கவனத்தை அது செலுத்துகிறது. பெண்களை வலுவூட்டல் மற்றும் டிஜிட்டல் உள்ளீர்ப்பை ஊக்குவிப்பதில் முக்கியமான அர்ப்பணிப்பையும் வங்கி கொண்டுள்ளது.

Photo Caption:

SDB வங்கி குழுவினருடன் மத்திய மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள குழு...

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நோய்க்கிருமிகளினால் பரவும் நோய்களைப் பற்றிய ஆராய்ச்சியை...

2025-06-19 19:09:28
news-image

புதிய முகமாக விளங்கும் Zesta-வின் விளம்பர...

2025-06-19 15:41:05
news-image

இலங்கை முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில்...

2025-06-18 17:29:14
news-image

உலகளாவிய நிலைத்தன்மை அங்கீகாரத்தின் இரண்டாவது ஆண்டை...

2025-06-18 13:28:22
news-image

செலான் ஹரசர, பிரத்தியேக சலுகைகள் ,...

2025-06-18 13:21:37
news-image

John Keells Properties-TRI-ZEN நிர்மாணச் செயற்திட்டத்தின்...

2025-06-18 12:42:10
news-image

ஒரியன்ட் பைனான்ஸ் இப்போது ஜனசக்தி பைனான்ஸ்...

2025-06-17 11:25:11
news-image

இலங்கை புகையிரத திணைக்களத்துடன் இணைந்து கொழும்பு...

2025-06-16 15:06:21
news-image

ஸ்கேன் தரு திரிய’ ஊடாக மஹியங்கனை,...

2025-06-12 16:30:51
news-image

LOLC குழுமத்தில் ரூபா. 41 பில்லியன்...

2025-06-12 12:29:00
news-image

AIA பொசன் வந்தனா - யாத்ரீகர்களுக்கான...

2025-06-12 12:14:32
news-image

மலைநாட்டு தலைநகரில் உயர் கல்வி மாற்றத்திற்கு...

2025-06-12 12:34:32