பிரித்தானியாவில் கால்பந்து விளையாட்டில் பாலியல் துஷ்பிரயோகத்தினால் 560 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கால்பந்து விளையாட்டில் குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்து விசாரித்துவரும் அதிகாரிகள், குற்றத்தில் ஈடுபட்டதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள 250 இற்கும் மேற்பட்ட சந்தேக நபர்களையும், பாதிக்கப்பட்ட 560 நபர்களையும் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சுமார் 311 கால்பந்து கழகங்களில் மற்றும் விளையாட்டின் அனைத்து வரிசைகளிலும் அங்கம் வகிப்பவர்கள் ஆகியோர் இந்த விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் நான்கு முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள். அதில், 96 சதவிகிதம் பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள் பலர் தங்கள் இளம் பருவத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக முறைப்பாடு கூறியதை தொடர்ந்து, கடந்தாண்டு இது போன்ற முறைப்பாடுகள் குறித்து தெரிவிக்க சிறப்பு தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.