குருநாகலில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

26 Aug, 2024 | 07:46 PM
image

குருநாகல், வாரியப்பொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாதெனிய - அநுராதபுரம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாரியப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (26) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

அநுராதபுரத்திலிருந்து பாதெனிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று  சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது, மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரது சடலம் குருணாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் பொருளாதார மீட்பில் சமூக உரையாடலின்...

2025-06-24 13:18:41
news-image

லுணுகலையில் தங்க நகை திருட்டு -...

2025-06-24 12:45:25
news-image

முன்னணி நரம்பியல் வைத்திய நிபுணர் உட்பட...

2025-06-24 12:55:54
news-image

யாழ். மாவட்ட அரச அதிபராக கடமைகளை...

2025-06-24 12:59:38
news-image

இந்திய விசேட விமானத்தில் இஸ்ரேலில் இருந்து...

2025-06-24 12:20:06
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-06-24 12:12:55
news-image

இஷாரா செவ்வந்தி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவில்லை...

2025-06-24 11:36:26
news-image

கம்பளையில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் கைப்பற்றல்...

2025-06-24 12:19:25
news-image

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு...

2025-06-24 11:48:14
news-image

பூம்புகாரில் இன்னல்களுடன் வாழும் மக்கள் -...

2025-06-24 11:12:15
news-image

பிரதமர் ஹரிணியை சந்தித்தார் ஐ.நா. மனித...

2025-06-24 11:45:38
news-image

பலாலி மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகளை...

2025-06-24 11:11:03