எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களால் வெளியிடப்படும் தேர்தல் விஞ்ஞாபனங்களில் மதுசாரம், புகைப்பிடித்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதை முன்னிறுத்தி உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்த 12 பரிந்துரைகள் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
எமது நாடு மதுசாரம், புகைப்பிடித்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையினால் பல்வேறு சுகாதார, சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கின்றது. புகைத்தல் மற்றும் மதுசாரப்பாவனையினால் தினமும் சுமார் 100 அகால மரணங்கள் ஏற்படுகின்றன. இலங்கையில் தடுக்கக்கூடிய 10 மரணங்களில் 8 மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. தொற்ற நோய்கள் ஏற்படுவதற்கான 4 காரணங்களும் இரு முதன்மைக் காரணங்களாக புகைத்தல் மற்றும் மதுசாரப்பாவனை என்பன காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் தனிநபர்கள் புகைத்தல் மற்றும் மதுசாரப்பாவனைக்காக தினமும் 121 கோடி ரூபாவை செலவிடுகின்றனர். புகைப்பிடித்தல் மற்றும் மதுசாரப்பாவனையானது ஒரு நாட்டுக்கு வருமானம் ஈட்டித்தருவதற்காகப் பயன்படுத்தக்கூடியது அல்ல. எமது நாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டில் கலால் வரியாக 165 ரூபா வசூலிக்கப்பட்டுள்ள போதிலும், அதே வருடத்தில் மதுசாரப்பாவனையால் நாட்டுக்கு ஏற்பட்ட சுகாதார மற்றும் பொருளாதாரச் செலவினம் 237 பில்லியன் ரூபாவாகும்.
எனவே பயனுள்ள கட்டுப்பாட்டுக் கொள்கைகளை உருவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மதுசாரம், புகைப்பொருட்கள் மற்றும் ஏனைய போதைப்பொருட்களின் பாவனையினால் ஏற்படக்கூடிய சுகாதார, சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்கான திறன் அரசாங்கத்துக்கு உண்டு.
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. இத்தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களால் வெளியிடப்படும் தேர்தல் விஞ்ஞாபனங்களில் மதுசாரம், புகைப்பிடித்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதை முன்னிறுத்தி மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் அடங்கிய 12 பரிந்துரைகளை நாம் முன்வைத்திருக்கின்றோம்.
பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவாறு வருடாந்தம் மதுசாரம் மற்றும் சிகரட் மீதான கலால் வரியை அதிகரிக்கக்கூடிய விஞ்ஞானபூர்வ வரி சுட்டெண் முறைமையை நடைமுறைப்படுத்தல், புகையிலை மற்றும் மதுசார நிறுவனங்களால் ஏற்கனவே அரசாங்கத்துக்கு செலுத்தப்படவேண்டியிருக்கும் வரிகளைத் திரட்டுவதற்கு ஏற்றவாறான முறையான பொறிமுறையொன்றை உருவாக்குதல், மதுசாரம் மற்றும் புகையிலைப் பாவனையைக் கட்டுப்படுத்துவதை முன்னிறுத்தி ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உரியவாறு நடைமுறைப்படுத்தல், தற்காலிக மதுபானச்சாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்காதிருத்தல், 2016 ஆம் ஆண்டு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட மதுசாரக்கட்டுப்பாடு தொடர்பான தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்தல், சட்டவிரோத மதுசாரம் மற்றும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை அமுல்படுத்தல், தேசிய மதுசாரம், போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்களை ஜனாதிபதி வேட்பாளர்கள் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்கவேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM