(நெவில் அன்தனி)
முப்பெரும் சக்திகளுக்கு (Big Three) வெளியே டெஸ்ட் கிரிக்கெட்டைப் பலப்படுத்தும் நோக்கத்துடன் 2025ஆம் ஆண்டிலிருந்து அர்ப்புணிப்பு நிதியை ஐசிசி அறிமுகப்படுத்தக்கூடும் என தகவல் வெளியாகியள்ளது.
இதற்கு முப்பெரும் சக்திகளான இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கிரிக்கெட் சபைகள் இணங்கியுள்ளதாக தெரியவருகிறது.
முப்பெரும் சக்திகளுக்கு வெளியே உள்ள கிரிக்கெட் சபைகள் அதிக லாபம் தரும் தொழில்முறை லீக்குகளில் போட்டியிட அனுமதிக்கும் வகையிலும் குழாம்களில் ஆற்றல்மிக்க வீரர்களை அதிகளவில் இணைத்துக்கொள்ளும் வகையிலும் ஒரு பிரத்தியேக நிதியை 2025இல் ஐசிசி அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, இங்கிலாந்து கிரிக்கட் சபை ஆகியவற்றின் ஆதரவுடன் கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா (அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை) தலைவர் மார்க் பெயாட், இதற்கான யோசனை யை முன்வைத்துள்ளார்.
இந்த யோசனை மத்திய நிதியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் கிரிக்கெட் சபைகள் ஊடாக ஒவ்வொரு வீரருக்கும் குறைந்த பட்சம் 10,000 அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைக்கவுள்ளது.
இந்தத் திட்டத்தை அடுத்த வருடம் முழுமையாக அமுல்படுத்தும் வகையில் இந்த வருட கிறிஸ்மஸ் பண்டிபகைக்கு முன்னர் இணக்கப்பாடு எட்டப்படவுள்ளது.
இது உலகம் முழுவதும் நடத்தப்படும் குறுகிய வடிவ (ரி20) கிரிக்கெட் போட்டிகளில் மிகப் பெரிய சம்பளத்திற்காக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து வெளியேறும் வீரர்ககளை டெஸ்ட் கிரிக்கெடடின்பால் அதிக அக்கறை செலுத்த வைக்கும என நம்பப்படுகிறது.
அத்துடன் போதிய நிதி வசதி இல்லாத கிரிக்கெட் சபைகளின் செலவினங்களும் இதன் மூலம் குறைவடையும்.
இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைவிட மற்றைய 9 டெஸ்ட் விளையாடும் நாடுகளும் டெஸ்ட் போட்டிகளின்போது பெரும்பாலும் நஷ்டத்துடனேயே செயற்படுகின்றன. டெஸ்ட் போட்டிகளை வரவேற்பு நாடுகளாக நடத்தும் போது மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு கிரிக்கெட் விஜயம் செய்யும்போதும் அவை நஷ்டத்தை எதிர்கொள்கின்றன.
இந்த வருட முற்பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கான தமது நாட்டு அணியின் கிரிக்கெட் விஜயத்திற்கு 2 மில்லியன் டொலர்கள் செலவானதாக கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜொனி க்வேவ் தெரிவித்தார்.
சுமார் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அமையவுள்ள இந்த நிதிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர் ஜெய் ஷா, இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவர் ரிச்சர்ட் தொம்சன் ஆகியோரின் ஆதரவு கிடைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
எவ்வாறாயினும் இது ஆரம்பக்கட்ட யோசனையாக இருந்துவருவதுடன் ஐசிசியின் பணிப்பாளர்கள் சபையிலோ பிரதம நிறைவெற்றுச் சபை உறுப்பினர்கள் மத்தியிலோ சம்பிரதாயபூர்வமாக இதுவரை கலந்துரையாடப்படவில்லை.
ஆனால் இந்த யோசனை நிறைவேறும் என்பதில் கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா தலைவர் பெயாட் உறுதியாக இருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM