இன்றைய திகதியில் எம்முடைய இளைய தலைமுறையினர் தங்களுடைய வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொண்டதால் இளம் வயதிலேயே இதய பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். அதிலும் குறிப்பாக நெஞ்சுவலி, மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகளுக்கு முகம் கொடுப்பது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இதய பாதிப்பு ஏற்பட்டால்... இதற்காக அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று, இதய சிகிச்சை மேற்கொள்ளும் வைத்திய நிபுணரிடம் ஆலோசனையும், அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளையும் மேற்கொண்டு, சிகிச்சையும் பெறுகிறோம். அந்த தருணத்தில் வைத்திய நிபுணர் இதயத்தில் ஏற்பட்டிருக்கும் ரத்த நாள அடைப்பிற்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்தால்.. உடனடியாக ஒப்புக்கொள்ளாமல் பரிசீலனை செய்துவிட்டு வருகிறோம் என்று இல்லத்திற்கு திரும்புகிறார்கள்.
அதன் பிறகு மற்றொரு இதய சிகிச்சை வைத்திய நிபுணரை சந்தித்து இதய பாதிப்பு குறித்த மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளை அவரிடம் கையளித்து இதய ரத்த நாள அடைப்பு பாதிப்பிற்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியமா? என இரண்டாவது பரிந்துரையை கேட்பர். இந்த தருணத்தில் அவர் பரிந்துரைக்கும் நவீன பரிசோதனை தான் எஃப் எஃப் ஆர் பரிசோதனை எனப்படும் ஃப்ராக்சனல் ஃப்ளோ ரிசர்வ் எனும் பரிசோதனை. இந்த நவீன பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகு எம்மாதிரியான சிகிச்சையை மேற்கொள்ளலாம் என்பதை துல்லியமாக அவதானிக்க இயலும்.
இத்தகைய பரிசோதனை ரத்த நாள அடைப்பு பாதிப்பு ஏற்பட்டு, அதற்காக ஒஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது.. பாதிப்பு அதாவது இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் உண்டாகி இருக்கும் கொழுப்பு படிவ பதிவு நாற்பது முதல் எழுபது என்ற ஆபத்தின் எல்லைக்கோட்டிற்குள் இருந்தால் இத்தகைய பரிசோதனை மேற்கொள்வது அவசியம் என வைத்திய நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இத்தகைய பரிசோதனையின் போது எம்முடைய இதயத்தில் உள்ள ஆரோக்கியமான மூன்று பெரிய ரத்த நாளங்களுக்குள் பிரத்யேக கருவி மூலம் குழாய் ஒன்றினை செலுத்துவார்கள். அதன் பிறகு அந்த குழாயின் ஒரு முனையை இதயத்தின் ரத்த நாள அடைப்பு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் பகுதிக்கு முன்னரும், மற்றொரு முனையை அதற்கு பின்னரும் வைத்து பிரத்யேக வண்ண சாயத்தை உட்செலுத்தி அளவிடுவார்கள். இதன்போது ரத்த நாள அடைப்பு பாதிப்பு எவ்வளவு கடுமையானதாக இருக்கிறது என்பதனை துல்லியமாக அவதானிக்க இயலும்.
இதன் பிறகு அத்தகைய ரத்த நாள அடைப்பு பாதிப்பை மருந்தியல் சிகிச்சைகள் மூலம் சீராக்க இயலுமா? அல்லது சத்திர சிகிச்சைகள் மூலமாகத்தான் சீரமைக்க இயலுமா? என்பதனை உறுதியாக தெரிவிப்பர். இத்தகைய பரிசோதனையின் முடிவில் ரத்த நாளங்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்பின் வீரியத்தையும், தன்மையையும் துல்லியமாக அளவிட இயலும். இதன் காரணமாக வைத்திய நிபுணர்கள் இதயத்தில் உள்ள ரத்த நாள அடைப்பு பாதிப்பிற்கு எம் மாதிரியான சிகிச்சை அவசியம் என்பதை இத்தகைய பரிசோதனை உறுதிப்படுத்தும் என விளக்கம் அளிக்கிறார்கள்.
வைத்தியர் அருணாச்சலம் - தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM