எம்மில் பலரும் அரசாங்க ஊழியராக இருந்தாலும் அல்லது தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியராக இருந்தாலும் மாத இறுதியிலோ அல்லது மாதத்தின் தொடக்கத்திலோ அவர்களது வங்கி கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும். எம்மில் பலரும் அதனை வங்கியிலிருந்து எடுத்து வந்து நேராக பூஜை அறையில் வைத்து வணங்குவதை காண்கிறோம்.
ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை பணம் என்பது மகாலட்சுமியின் அம்சம் என கருதி இத்தகைய செயல்பாட்டினை மேற்கொள்கிறார்கள். ஆனால் இதுபோன்று செய்தால் அவர்களது வீட்டில் செல்வம் சேராது. பணம் கரைந்து கொண்டிருக்கும். மாதா மாதம் கடன் வாங்கும் சூழலும் உருவாகலாம். இதனை மாற்றி அமைத்து நீங்கள் மாதந்தோறும் பெறும் சம்பளத்தை எம்முடைய முன்னோர்கள் குறிப்பிட்டபடி வைத்து பாவிக்கத் தொடங்கினால்... செல்வம் உயரும். சேமிப்பும் உயரும்.
நீங்கள் மாதந்தோறும் வங்கியில் இருந்தோ அல்லது நிறுவனத்தில் இருந்தோ சம்பளமாக பெறும் பணத்தை - ரூபாயை நேராக பூஜை அறையில் வைக்காமல், அதற்கு பதிலாக உங்களது பீரோவில் உள்ள பணப்பெட்டியில் அதிலும் மரத்தினால் உருவாக்கப்பட்ட பணப்பெட்டியில் தான் வைக்க வேண்டும். அதனுடன் சிறிதளவு பச்சை கற்பூரத்தையும் சேர்த்து வைத்து விட வேண்டும்.
அதன் பிறகு நீங்கள் அதிலிருந்து செலவுகளுக்கு பணம் எடுத்துக் கொள்ளலாம். இதைப் போன்று பணத்தை சேமிக்க மற்றும் வைக்க தொடங்கினால்.. செலவுகள் கட்டுக்குள் வருவதுடன் மாதம்தோறும் குறைந்தபட்சமாவது சேமிக்க தொடங்குவீர்கள். இதனால் கடன் வாங்குவது குறைந்து, கடன் இல்லாத சூழல் கூட உருவாகலாம். மேலும் சேமிப்பு சிறிய அளவில் தொடங்கி உயர்வதையும் அனுபவத்தில் காணலாம்.
இந்த ஒன்றை மட்டும் மேற்கொள்வதுடன் நில்லாமல் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் உங்களது இல்லத்தில் பாசி பருப்பு பாயாசத்தை செய்ய வேண்டும். அதனை நீங்கள் உங்களுடைய பூஜை அறையில் இருக்கும் தெய்வத்திற்கு நிவேதனமாக படைக்க வேண்டும். அதன் போது தேங்காய் எண்ணெயில் வாழைத்தண்டு திரியினை போட்டு தீபமேற்றி வழிபட வேண்டும். இதனை வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் தொடர்ச்சியாக செய்து வரும் போது.. உங்களது செல்வ நிலை உயர்வதுடன், வீட்டில் அமைதியின்மை குறைந்து, மகிழ்ச்சியும் நிம்மதியும் பரவுவதை அனுபவத்தில் உணரலாம். மேலே சொன்ன இரண்டு எளிய வழிமுறைகளையும் கடைப்பிடித்து, செல்வத்தை சேர்த்து, வீட்டில் மகிழ்ச்சியை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM