கண்டியில் இருந்து பொக்காவலை வரைக்கும் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ் வண்டி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் 46 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொக்காவலை நகரிற்கு அண்மித்த பகுதியில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

பொக்காவலையில் இருந்து கண்டிக்கு பயணித்துக்கொண்டிருந்த பஸ் வண்டி  ஒன்றுடன் பெண் ஒருவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்தில் கடும் காயங்களுக்கு உள்ளான மோட்டார் சைக்கிளை செலுத்திய பெண் பொக்காவலை வைத்திய சாலையில் அனுமதித்த போதும் அவர் அங்கு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்தில் உயிரிழந்தவர்  பொக்காவலை வேவல பிரதேசத்தை சேர்ந்த   யூ.ஜீ மானெல்  என்ற 46 வயதுடைய பெண் ஆவார்.

இவ் விபத்து தொடர்பாக  பஸ் வண்டியின் சாரதியை பூஜாபிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளதுடன்  அவரை இன்று கண்டி நீதவான் முன் ஆஜர் செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.