அமானா வங்கி மற்றும் Prime குரூப் இணைந்து கனவு இல்லத்தை நனவாக்க முன்வந்துள்ளன!

26 Aug, 2024 | 03:21 PM
image

வாடிக்கையாளர்களுக்கு தமது கனவு இல்லத்தை நனவாக்கிக் கொள்ளும் நிதி வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அமானா வங்கி, Prime குரூப் உடன் கைகோர்த்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் Prime குரூப் உடன் வங்கி கைச்சாத்திட்டிருந்தது. அதனூடாக வாடிக்கையாளர்களுக்கு சொகுசான வாழிட அனுபவத்தை சிக்கல்கலின்றி, சௌகரியமான முறையில் ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்துள்ளது. 

இந்தப் பங்காண்மையின் பெறுபேறாக, பூர்த்தி செய்யப்பட்ட தொடர்மனைகள் மற்றும் Prime குரூப் சொத்துகளுக்கு, அமானா வங்கியிடமிருந்து நிதி வசதியை பெற்றுக் கொள்வதற்கு முன்அனுமதி பெற்றுள்ளன. வாடிக்கையாளரின் கடன் அனுமதி மட்டுமே நிதிவசதியை பெற்றுக் கொடுப்பதற்கு அவசியமானதாக அமைந்திருக்கும். இதனை வங்கி மூன்று தினங்களுள் பூர்த்தி செய்யும். பல்வேறு வருமான திறன்களுக்கமைவான மீளச் செலுத்தும் திட்டங்களையும் வங்கி வழங்குகின்றது. மக்களுக்கு நட்பான வழிமுறையை உறுதி செய்யும் வகையில், அமானா வங்கி இல்ல நிதிவசதியளிப்பினூடாக, வாடிக்கையாளர்களுக்கு தாம் பெற்றுக் கொண்ட நிதியை, முன்கூட்டியே எவ்விதமான மேலதிகக் கட்டணங்களுமின்றி செலுத்தித் தீர்க்கும் வசதியும் காணப்படுகின்றது. 

இந்தப் பங்காண்மை தொடர்பில் அமானா வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில், “Prime குரூப் உடனான எமது பங்காண்மையினூடாக, உயர் தரம் வாய்ந்த வாழிடப் பகுதிகளுக்கு அதிகரித்துச் செல்லும் கேள்வியை நிறைவேற்றுவதற்கான எமது அர்ப்பணிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையினூடாக, வெற்றிகரமான சொத்து முதலீடுகளுக்கு வழியமைக்கப்படும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார். 

Prime குரூப் பணிப்பாளர் நளிந்த ஹீனட்டிகல இந்தப் பங்காண்மை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “எமது  வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்ச்சியான மற்றும் மக்களுக்கு நட்பான நிதித் தெரிவுகளை பெற்றுக் கொடுப்பதற்காக அமானா வங்கியுடன் கைகோர்த்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். சௌகரியமான மட்டுமன்றி சகாயமான தீர்வுகளுடன், சொகுசான வாழ்க்கையை பலருக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இந்தப் பங்காண்மை எமக்கு உதவியாக அமைந்திருக்கும்.” என்றார். 

அமானா வங்கியின் பிரத்தியேகமான சொத்துக்களுக்கான நிதி வசதியளிப்பு தீர்வுகள் பற்றி மேலதிக தகவல்களுக்கு, வாடிக்கையாளர்கள் www.amanabank.lk  எனும் இணையத்தளத்தைப் பார்வையிடலாம் அல்லது 011 7756756 ஊடாக அழைப்பு நிலையத்துடன் தொடர்பு கொள்ளலாம். 

அமானா வங்கி பற்றி 

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 37ஆம் ஸ்தானத்தில் ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது. அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது. 

Prime குரூப் பற்றி

இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் ஒப்பற்ற முன்னோடியாக Prime குருப் திகழ்கின்றது. நம்பிக்கை மற்றும் சிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 29 வருடங்களுக்கு மேலான உறுதியான வரலாற்றைக் கொண்டுள்ளது. “புவியில் சிறந்த இடத்தை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்பு” எனும் பசுமையான நோக்கத்துக்கமைய இயங்கும் Prime குரூப், காணிகள், இல்லங்கள் மற்றும் தொடர்மனைகள் போன்ற பிரிவுகளில் தனது துணை நிறுவனங்களினூடாக தொடர்ச்சியான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி அதனை விஞ்சும் வகையில் செயலாற்றுகின்றது. சிறப்புக்கான Prime குரூப்பின் அர்ப்பணிப்புக்காகவும், விசேட சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்காகவும், தொடர்ச்சியாக இரு வருடங்களில் “இலங்கையின் சிறந்த வடிவமைப்பாளர்” எனும் கௌரவிப்பு ஆசியா புரொப்பர்ட்டி குருவினால் வழங்கப்பட்டிருந்தது. அத்துடன், ஆசியா வன் சஞ்சிகையினால் “ஆசியாவின் சிறந்த வர்த்தக நாமங்களில் உள்ளடக்கம்” மற்றும் “2018 ஆம் ஆண்டின் சிறந்த தொழில்முயற்சியாளர்” ஆகிய விருதுகளினால் தொழிற்துறையில் அதன் தலைமைத்துவம் மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அண்மையில் தொடர்ச்சியாக பெற்றுக் கொண்ட பல்வேறு விருதுகளுடன், இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் நன்மதிப்பைப் பெற்ற சிறந்த நிறுவனமாக Prime குரூப் திகழ்கின்றது. இதனை பல்வேறு அமைப்புகளும் உறுதி செய்துள்ளன. புத்தாக்கம், ஒன்றிணைப்பு மற்றும் தமது நோக்கத்துக்கான உறுதியான அர்ப்பணிப்புடன் சொகுசான வாழ்க்கையை முன்னெடுப்பதற்கான வசதியை தொடர்ந்தும் ஏற்படுத்திய வண்ணமுள்ளது. 

இடமிருந்து: ஹர்ஷினி முரளிதரன் – பங்காண்மை ஈடுபாட்டு அதிகாரி, ரியாஸ் நூர் – நுகர்வோர் நிதிவசதியளிப்பு தலைமை அதிகாரி, சித்தீக் அக்பர் – உப தலைவர் (நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல்), இம்தியாஸ் இக்பால் – அமானா வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி, நாலிந்த ஹீனடிகல – நிறைவேற்று பணிப்பாளர் கூட்டாண்மை விவகாரங்கள், ஷிஹானா பிராஹ்மனகே – நிறைவேற்று பணிப்பாளர், சுரங்க பீரிஸ் – சிரேஷ்ட உதவி பொது முகாமையாளர் (விற்பனைகள் மற்றும் சந்தைப்படுத்தல்கள்) மற்றும் துவான் ஹனீஃபா – சிரேஷ்ட முகாமையாளர் (விற்பனைகள் மற்றும் சந்தைப்படுத்தல்). 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024 ‘ஹஜ் - உம்றா’ பயணத்தில்...

2024-09-12 19:54:27
news-image

இலங்கையில் குடியிராத வெளிநாட்டு தனிநபர்களுக்கு உள்வாரி...

2024-09-12 13:02:54
news-image

தனியார் துறையில் புத்தாக்க நிதியளித்தல் தீர்வுகள்...

2024-09-12 13:21:44
news-image

மாற்று முதலீட்டு வாய்ப்புகளை முன்னிலைப்படுத்த மட்டக்களப்பில்...

2024-09-12 13:15:45
news-image

குளியாப்பிட்டியாவில் வாகன பாகங்களை ஒன்றிணைத்து வாகனங்களை...

2024-09-11 17:16:20
news-image

சவாலான கால நிலைகளிலிருந்து உங்கள் வீட்டை...

2024-09-10 15:55:46
news-image

3 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் பதிவுகளுடன்...

2024-09-10 12:23:12
news-image

சுவாச ஆரோக்கியத்திற்கான NIHR குளோபல் ஹெல்த்...

2024-09-09 20:40:22
news-image

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க ரணில் வில்லத்தரகே...

2024-09-09 19:39:28
news-image

50 ஆண்டுகளை நிறைவு செய்யும் எய்ட்கன்...

2024-09-09 10:20:01
news-image

தாய்லாந்தில் இடம்பெற்ற 13ஆவது HAPEX மற்றும்...

2024-09-09 09:30:01
news-image

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் அறிமுகமாகவுள்ள எல்.டி.எல் Holdings...

2024-09-06 16:41:54