யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் வைத்தியரொருவரின் வீடொன்றின் மீது நேற்றிரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த குண்டுத் தாக்குதலில் சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியரின் தந்தைக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த சிலரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.