(நெவில் அன்தனி)
ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023 - 2025 சுழற்சிக்கான அணிகள் நிலையில் இங்கிலாந்தும் பங்களாதேஷும் முன்னேறியுள்ளன.
சில வாரங்களுக்கு முன்னர் அணிகள் நிலையில் கடைசி இடத்தில் இருந்த இங்கிலாந்து, தனது சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளை 3 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டதாலும் இலங்கையை கடந்த வாரம் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் வெற்றிகொண்டதாலும் ஐந்து இடங்கள் முன்னேறி நான்காம் இடத்தை அடைந்துள்ளது.
இங்கிலாந்து 41.07 சதவீத புள்ளிகளுடன் தற்போது நான்காம் இடத்தில் இருக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிராக ஓல்ட் ட்ரபோர்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கு முன்னர் 50 சதவீத புள்ளிகளுடன் 4ஆம் இடத்தில் இருந்த இலங்கை, முதல் டெஸ்ட்டில் அடைந்து தோல்வியடன் 5ஆம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. தற்போது இலங்கை 40.00 சதவீத புள்ளிகளைக் கொண்டுள்ளது.
இதேவேளை, ராவில்பிண்டியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை முதல் தடவையாக வெற்றிகொண்ட பங்களாதேஷ் அணிகள் நிலையில் 8ஆம் இடத்திலிருந்து 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. பங்ளாதேஷும் தற்போது 40 சதவீத புள்ளிகளைக் கொண்டுள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் இந்தியா (68.52 சதவீத புள்ளிகள்), அவுஸ்திரேலியா (62.50 சதவீத புள்ளிகள்), நியூஸிலாந்து (50.00 சதவீத புள்ளிகள்) ஆகியன தொடர்ந்தும் முதல் மூன்று இடங்களில் உள்ளன.
தென் ஆபிரிக்கா (38.89 சதவீத புள்ளிகள்), பாகிஸ்தான் (30.56 சதவீத புள்ளிகள்), மேற்கிந்தியத் தீவுகள் 18.52 சதவீத புள்ளிகள்) ஆகிய கடைசி 3 இடங்களில் இருக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM