இலங்கையில் முன்னிலை வகித்துவருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, தனது தேசிய விநியோகத்தரான சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி உடன் இணைந்து அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பிரதான ஸ்மார்ட்போன் உற்பத்தியான Huawei P10 மற்றும் அதனுடன் சேர்த்து Huawei P10 Plus ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

கவர்ச்சியான நிறங்கள் மற்றும் முடிவு வேலைப்பாடுகளுடன் வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் உற்பத்திகள்ரூபவ் அதனை உபயோகித்து எடுக்கப்படுகின்ற அனைத்து புகைப்படங்களையும் முழுமையாக வசப்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக அதிநவீன புகைப்படவியல் தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய Leica முன் புற மற்றும் பின்புற கமராக்களையும் கொண்டுள்ளன.

Huawei Sri Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஷண்லி வாங், கூறுகையில்,

“இன்று நாம் இலங்கையில் அதிசிறந்த, எமது பிரதான Huawei P10 உற்பத்தியை அறிமுகப்படுத்தியுள்ளோம். இலங்கை மக்களின் வாழ்க்கைமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தவல்ல அதிநவீன, மிகச் சிறந்த ஸ்மார்ட்போன் உற்பத்தியை அறிமுகப்படுத்தி வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் அவர்கள் கூறுகையில்,

“அதிசிறந்த தரம் மற்றும் மேன்மையான சேவை ஆகியவற்றின் இணைப்புடன் திருப்புமுனையை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்தின் கீழ் மிகச் சிறந்த ஒரு உற்பத்தியை வழங்கிரூபவ் அதன் மூலமாக எமது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக நற்பெறுமானத்தை Huawei சேர்ப்பித்து வருகின்றது.

இப்பிரதான Huawei P10 ஆனது ஸ்மார்ட்போன் உற்பத்திப் பிரிவில் “கட்டுபடியாகும் சொசுகு” என்பதற்கு புதிய அர்த்தத்தை சேர்ப்பிக்கும் என நாம் நம்புகின்றோம்” என்று குறிப்பிட்டார். 

மிகவும் விமரிசையாக இடம்பெற்ற அறிமுக நிகழ்வில், டயலொக் வாடிக்கையாளர்கள், புதிய Huawei P10 மூலமாக VoLTE தொழில்நுட்பத்தின் அனுகூலங்களை அனுபவிப்பதற்கு ஏதுவாக, அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் வலையமைப்பு பங்காளராக டயலொக் அக்ஸியாட்டா பீஎல்சி நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

2G அல்லது 3G தொழில்நுட்பத்துடன் ஒப்பிடுகையில், 4G தொழில்நுட்பத்தின் மூலமாக அதிகளவான தரவு (data) மாற்றம் செய்யப்படக்கூடியதாக உள்ளமையால் 3G அல்லது 2G இணைப்புக்களில் VoLTE அழைப்பின் தரம் அதிசிறந்ததாக உள்ளதுடன் உயர்ந்த அளவில் தெளிவு கொண்ட குரல் (Voice) மற்றும் ஏனைய அனுகூலங்களையும் வழங்குகின்றது.

இலங்கையிலுள்ள ஏனைய 3G மற்றும் 4G வலையமைப்புக்களுடன் ஒத்திசைவு கொண்டதாகவும் இச்சாதனம் காணப்படுவதுடன் புதிய P10 ஸ்மார்ட்போன் ஒன்றை தமக்கு சொந்தமாக்கிக் கொள்ள விரும்புகின்ற அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தெளிவான அனுகூலத்தை சேர்ப்பிக்கின்றது.

P10 மற்றும் P10 Plus ஆகிவற்றிற்கு முற்கூட்டிய கொள்வனவு விண்ணப்பத்தை டயலொக் மூலமாக முன்வைக்கின்ற வாடிக்கையாளர்களுக்கு கமரா அன்பளிப்புப் பொதி மற்றும் விரைவாக மின்னேற்றம் செய்ய உதவுகின்ற Power Bank சாதனம் ஆகியன முற்றிலும் இலவசமாகக் கிடைக்கப்பெறும்.

மேலும் 6 மாதங்களுக்கான இலவச டயலொக் 2GB தரவுத் திட்டத்தையும் வாடிக்கையாளர்கள் பிரத்தியேகமாகப் பெற்று அனுபவிக்க முடியும். P10 மற்றும் P10 Plus வாடிக்கையாளர்கள் அனைவரும் ஒரு பிரத்தியேகமான மிக முக்கிய பிரமுகர்களுக்கான சேவை அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதுடன் Huawei வழங்கும் முழுமையான 2 வருட உத்தரவாதம் மற்றும் கொள்வனவு செய்து முதல் மூன்று காலப் பகுதியில் ஒரு தடவை முகத்திரையை மாற்றீடு செய்யும் வாய்ப்பு ஆகிய நன்மைகளையும் அனுபவிக்க முடியும்.

டயலொக் அக்ஸியாட்டா பீஎல்சி மூலமாகவும் கொள்வனவு முன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடிவதுடன், டயலொக் பிரதான காட்சியறைரூபவ் மொடேர்ன் ஆர்க்கேட், உலக வர்த்தக மையம், நீர்கொழும்பு, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்கிலுள்ள டயலொக் காட்சியறைகளிலும் இச்சாதனங்கள் கிடைக்கப்பெறவுள்ளன. மஜெஸ்டிக் சிற்றி, லிபேர்ட்டி பிளாஸா மற்றும் கண்டி சிற்றி சென்டர் ஆகிய இடங்களிலுள்ள ர்ரயறநi பிரதான காட்சியறைகள் மூலமாக வாடிக்கையாளர்கள் கொள்வனவு முன் விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும்.

பெறுபேற்றுத்திறனைப் பொறுத்தவரையில், புதிய தர நடைமுறைகளை அறிமுகப்படுத்தி, படைப்பாக்கத்திறன் ஆற்றலை வெளிக்கொணர்வதை ஊக்குவிப்பதில் Huawei கொண்டுள்ள தொடர்ச்சியான, அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டை புதிய P உற்பத்தி வரிசை சாதனங்கள் வெளிக்காண்பிக்கின்றன. HUAWEI P10 ஆனது Leica Dual-Camera 2.0 இனையும் HUAWEI P10 Plus ஆனது Leica Dual-Camera 2.0 Pro Edition வடிவத்தையும் கொண்டுள்ளன. துல்லியமான 3D முக கண்டறிதல் பட வசதியுடன் வலிமையான வெளிச்ச மாறுபாடுகள் மேம்பட்ட படவுருவங்கள் இயற்கையான bokeh விளைவு மற்றும் HUAWEI Hybrid Zoom போன்ற தொழில்நுட்பங்களைக்கொண்டுள்ளதுடன் மிகச் சிறப்பான சுய படப்பிடிப்புக்களுக்கு (செல்ஃபி) புதிய பிரகாசமான தணிக்கை மற்றும் பாரிய முகவாய் தொழில்நுட்பங்களுடனான உலகின் முதலாவது Leica முன்புற கமராவையும் கொண்டுள்ளன. Pantone உடன் முதன்முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ள இடைத் தொழிற்துறை பங்குடமையின் கீழ், தொழிற்துறையில் முதன்முறையாக Hyper Diamond-Cut முடிவு வேலைப்பாடு மற்றும் நிற வடிவங்கள் அடங்கலாக நவீன நிறங்கள் மற்றும் வடிவமைப்புக்களில் அவை வெளிவந்துள்ளன.

Kirin 960 processor, HUAWEI Ultra Memory மற்றும் புதிய EMUI 5.1, மற்றும் ஈடுஇணையற்ற தொழிற்பாட்டுத் திறனை வழங்கும் வகையில் தொழிற்துறையில் முன்னிலை வகிக்கும் 4X4 LTE MIMO அன்டெனா தொகுதி மற்றும் 2X2 Wi-Fi MIMO அன்டெனா தொகுதி ஆகிய தொழில்நுட்பங்களையும் இச்சாதனங்கள் கொண்டுள்ளன.

வலிமையான Kirin 960 processor மற்றும் முற்றிலும் புதிய EMUI 5.1 ஆகியவற்றின் பலனாக HUAWEI P10 மற்றும் HUAWEI P10 Plus சாதனங்கள் ஸ்மார்ட்போன் திறன் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றை மேலும் ஒரு படி மேற்கொண்டு சென்றுள்ளன. Kirin 960 ஆனது Huawei இன் அதிநவீன உயர் பெறுபேற்றுத்திறன் கொண்ட SoC chipset ஆகக் காணப்படுகின்றது. அனைத்து SoC களுடனும் ஒப்பிடுகையில் மிகச் சிறந்த multicore பெறுபேற்றுத்திறனை CPU வழங்குவதுடன் GPU ஆனது தொழிற்பாட்டுத்திறனில் 180 சதவீத மேம்பாட்டையும் மின்வலு திறனில் 40 சதவீத மேம்பாட்டையும் வழங்குகின்றது.

புகழ்பூத்த P உற்பத்தி வரிசையின் வடிவமைப்பைப் பின்பற்றியவாறு HUAWEI P10 ஆனது 6.98 மி.மீ. அளவில் சௌகரியத்தை வழங்கும் மெலிதான குறைந்த எடை கொண்ட கவர்ச்சியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. போட்டி நிறுவனங்களின் சாதனங்களில் வெளிப்புறமாக நீட்டிக் கொண்டிருக்கும் கமராக்களுடன் ஒப்பிடுகையில்ரூபவ் P உற்பத்தி வரிசையின் தனித்துவமான கமரா முகப்பானது சாதனத்தின் பின்புறத்துடன் ஒரே மட்டத்தில் காணப்படுகின்றது. 5.1 அங்குலம் மற்றும் 5.5 அங்குலம் ஆகிய இரு வடிவங்களும், அதிநவீன Corning Gorilla 5 Glass பாதுகாப்பு மற்றும் ஒடுங்கிய bezel விளிம்புகளைக் கொண்டுள்ளதுடன் HUAWEI P10 Plus ஆனது கூடிய துல்லியத்தைத் தரும் வகையில் 2K முகத்திரையையும் கொண்டுள்ளது.

சிறு அளவு கொண்ட, தூய்மையான வடிவமைப்பிற்காக உலோக முடிவு வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளமைக்குப் புறம்பாக, HUAWEI P10 மற்றும் HUAWEI P10 Plus ஆகியவற்றின் விரல் அடையாள சென்சார் தொழில்நுட்பமானது தற்போது தொலைபேசி சாதனத்தின் முன்பக்கத்தில் காணப்படுவதுடன், ஒரு தொடர்ச்சியான கண்ணாடிப் பலகத்தின் கீழே அமையப்பெற்றுள்ளது. கண்டறியும் சட்டத்திற்குப் பதிலாக விரல் அடையாள சென்சார் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டமையானது முகத்திரையை பெரிய அளவில் காண்பிப்பதற்கு இடமளித்துள்ளதுடன் திறன் தொடுகை முறை கண்டறிதல் தொழில்நுட்பமானது அதி விரைவான தொழிற்பாட்டைக் கொண்டுள்ளதுடன் அதிக பணிச்சூழல் இசைவாக்கம் கொண்டதாகவும் காணப்படுகின்றது. 

எடுக்கும் அனைத்து படங்களையும் முழுமையாக வசப்படுத்துகின்றது

HUAWEI P10 இன் புதிய Leica Dual-Camera 2.0 மற்றும் HUAWEI P10 Plus இன் Leica Dual-Camera 2.0 Pro Edition ஆகிய வடிவங்கள், பின்பக்க இரட்டை கமரா வசதியைக் கொண்டுள்ளதுடன் Leica முன்புற கமராவானது உருவம் ஒன்றை முழுமையாக வசப்படுத்திக் கொள்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு இடமளிக்கின்றது. 20-megapixel monochrome sensor> 12-megapixel RGB sensor மற்றும் மேம்பட்ட fusion algorithm ஆகிய தொழில்நுட்பங்களுடன் புதிய P உற்பத்தி வரிசையானது ஸ்மார்ட்போன் மூலமாக அதிசிறந்த தொழில்நுட்பவியல் மற்றும் கலைநயம் கொண்ட புகைப்படவியல் அம்சங்களை வழங்குகின்றது.

விரைவான, மிகவும் துல்லியமான இனங்காணலுக்குரூபவ் 190 விபரமான இனங்காணல் முனைகளுடன், ஒரு துல்லியமான 3D முக இனங்காணல் தொழில்நுட்பத்தையும் இச்சாதனங்களின் புகைப்படவியல் தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளடக்கியுள்ளன. Huawei இன் வலிமையான துல்லியம் மற்றும் மேம்பட்ட புகைப்பட அம்சங்களுக்கு முக இனங்காணல் ஆனது ஒரு வலுவான அடிப்படையாகும். நீடித்த ஆராய்ச்சியின் அனுகூலத்துடன் பிரகாசமான உருவப்படங்களுக்கு, ஸ்டூடியோ கலைநுட்பத்தை ஒத்த, மறுபிரகாச மற்றும் அழகுபடுத்தல் அம்சங்களைத் தோற்றுவிப்பதற்கு smart imaging algorithm தொழில்நுட்பம் பயன்படுகின்றது. புதிய depth-of-field algorithm, இயற்கையான bokeh விளைவு ஆகியவற்றின் பயன்பாடு கூர்மையான, தெளிவான மற்றும் அதிக தத்ரூபமான நிறங்களைக் கொண்ட படவுரு விளைவுகளை முன்புறத்தில் ஏற்படுத்துவதுடன், பின்புறமானது தொடர்ந்தும் நேர்த்தியான அளவில் மங்கலாகவே பேணப்படுகின்றது. RGB மற்றும் monochrome mode தொழில்நுட்பங்களில் இயற்கை bokeh விளைவு  கிடைக்கப்பெறுவதுடன் புகைப்படம் ஒன்றை எடுத்த பின்னர் மீண்டும் அதனைச் சீரமைப்பதற்கு உதவுகின்றது.

GoPro உடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ள HUAWEI P10 மற்றும் HUAWEI P10 Plus ஆகியன mobile editing tool தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளதுடன் பாவனையாளர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை முழுமையாக மாற்றியமைப்பதற்கும் இசைத்தடங்களை புகுத்தியும் வலிமையான வீடியோவாக அவற்றை மாற்றியமைக்க உதவுகின்றன. ஒரு சில எளிமையான படிமுறைகளின் மூலமாக அவற்றை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இலகுவாக பகிர்ந்துகொள்ள முடியும்.

நிற தொழில்நுட்பத்தில் உலகில் முன்னிலை வகித்துவருகின்ற Pantone Color Institute உடன் முதன்முதலாக ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள தொழிற்துறை இடைப்பங்குடமையின் பலனாக, தனித்துவம் வாய்ந்த நிறத் தெரிவுகளையும் HUAWEI P100 மற்றும் HUAWEI P10 Plus ஆகியன கொண்டுள்ளன. Huawei இன் வடிவமைப்பு நிபுணத்துவம் மற்றும் Pantone இன் நம்பிக்கையான நிற ஆற்றல் நிபுணத்துவம் ஆகியவற்றின் இணைப்பின் உதவியுடன், நவீன வாடிக்கையாளர்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலும், மொபைல் சந்தையில் புதிய நிறப் போக்குகளைக் கடைப்பிடிக்கும் வகையிலும் இரு புதிய நிற வடிவங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. Dazzling Blue (நீலம்) மற்றும் 2017 ஆம் ஆண்டின் Pantone நிறமான Greenery (பச்சை) ஆகியன Pantone Color Institute இனால் வடிவமைக்கப்பட்டு, அழகிய, கவர்ச்சியான முடிவு வேலைப்பாடுகளாக Huawei இனால் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

Huawei P10 ஆனது Graphite Black, Dazzling Gold மற்றும் Dazzling Blue ஆகிய நிற வடிவங்களில் ரூபா 94,900 என்ற விலையில் கிடைக்கப்பெறுகின்றன. மட்டுப்படுத்தப்பட்ட கையிருப்பு கொண்ட புதிய பரிமாணத்தில் Huawei P10 Green வடிவமானது ஜுன் மாதம் முதல் இலங்கையில் கிடைக்கப்பெறவுள்ளது.

Huawei P10 Plus ஆனது ரூபா 109,900 என்ற விலையில் கிடைக்கப்பெறுகின்றது. டயலொக் அக்ஸியாட்டா பீஎல்சி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் Huawei P10 இன் கொள்வனவிற்கான முன்விண்ணப்பதை விடுக்க முடியும். டயலொக் அக்ஸியாட்டா பீஎல்சி உடன் இணைந்து, www.dialog.lk/p10 என்ற இணையத்தளத்தின் மூலமாக Huawei P10 இற்கான கொள்வனவு முன் விண்ணப்பத்தை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ள முடியும். முன் விண்ணப்ப வசதியின் மூலமாக Dialog Club Vision வாடிக்கையாளர்கள் புதிய ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர். அனைத்து Huawei அனுபவ காட்சியறைகள், தெரிவுசெய்யப்பட்ட டயலொக் அக்ஸியாட்டா காட்சியறைகள், நாடளாவியரீதியிலுள்ள தெரிவுசெய்யப்பட்ட பிரதான முகவர்கள் மற்றும் இலங்கையில் ஸ்மார்ட்போன்களை சந்தைப்படுத்துவதில் முன்னிலை வகித்துவருகின்ற சிங்கர் ஸ்ரீலங்கா ஆகியவற்றின் மூலமாக இந்த உற்பத்திகளைப் பெற்றுக்கொள்ள முடியும். சிங்கர் மெகா, சிங்கர் பிளஸ் மற்றும் சிசில் வேர்ல்ட் காட்சியறைகள் அடங்கலாக, 400 இற்கும் மேற்பட்ட சில்லறை வியாபார காட்சியறைகள் கொண்ட நாட்டிலுள்ள மிகப் பாரிய சிங்கர் சில்லறை வர்த்தக வலையமைப்பு மற்றும் நாடெங்கிலும் 1,500 முகவர் விற்பனை நிலையங்களைக் கொண்ட சிங்கரின் டிஜிட்டல் விநியோக ஊடகம் ஆகியவற்றின் மூலமாக இந்த உற்பத்திகள் நாடெங்கிலும் இலகுவாகக் கிடைக்கப்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.