ரணிலை தோற்கடிப்பதற்கு சஜித், அநுர ராஜபக்ஷர்களுடன் டீல் - நிமல் லன்சா

26 Aug, 2024 | 10:38 AM
image

(எம்.மனோசித்ரா)

சஜித் பிரேமதாசவுக்கும், அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெரும் சவாலாகவுள்ளார். அதனால் தான் இவர்கள் இருவரும் ராஜபக்ஷர்களுடன் டீல் செய்து கொண்டிருக்கின்றனர். ராஜபக்ஷர்கள் தேர்தலில் போட்டியிடுவது ரணிலை தோற்கடிப்பதற்காகவே அன்றி, வெற்றி பெறுவதற்காக அல்ல என  பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்தார்.

திவுலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நிமல் லான்சா இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வீழ்ச்சியடைந்த நாட்டைக் கட்டியெழுப்பினார். நாட்டை வீழ்த்தியது யார் என்பது மக்களுக்குத் தெரியும். வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்பதற்கு அந்த சந்தர்ப்பத்தில் எவரும் உதவவில்லை. அந்த சவாலை ஏற்பதற்கு அஞ்சி அனைவரும் ஓடி ஒளிந்த போது ரணில் விக்கிரமசிங்க முன்வந்தார். சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க சவாலை ஏற்க முடியாது எனக் கூறினர். ஆனால் ரணில் அவ்வாறு கூறவில்லை.

எரிபொருள், மின்சாரம், உரம், மருந்து என எவையும் இல்லாமல் மக்கள் துயரடைந்த போது நாட்டைப் பொறுப்பேற்க எவரும் முன்வரவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சிலர் அந்த வரலாற்றை மறக்க முயற்சிக்கிறார்கள். நாம் வீழ்ச்சியடைந்திருந்த போது, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த போது அனைவரையும் காப்பாற்றிய தலைவருக்கு நன்றி கூற வேண்டும்.

அன்று நாம் கூறியதைக் கேட்காமல் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதலை மேற்கொண்டு, நாட்டில் பாரிய அழிவை ஏற்படுத்தினர். சஜித் பிரேமதாச அன்று ரணில் ராஜபக்ஷ என்று கூறினார். ஆனால் இன்று அவ்வாறு கூற முடியாது. ராஜபக்ஷர்கள் இன்று சஜித் பிரேமதாசவுக்கும் ஜே.வி.பி.க்கும் உதவுகின்றனர். ராஜபக்ஷர்கள் வெற்றி பெறுவதற்காக தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக ரணில் விக்கிரமசிங்கவை தோல்வியடைச் செய்வதற்காகவே அவர்கள் போட்டியிடுகின்றனர்.

ஆனால் நாம் மனசாட்சிக்கமைய செயற்படுகின்றோம். இன்று சஜித் பிரேமதாச ராஜபக்ஷர்களை தூற்றுவதில்லை. அதேபோன்று ஜே.வி.பி.யும் ராஜபக்ஷர்களை விமர்சிப்பதில்லை. இவரும் ரணில் விக்கிரமசிங்கவையே விமர்சிக்கின்றனர். காரணம் அவர்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவே சவாலாக இருக்கின்றார். ஆனால் மக்கள் இன்று அவருடன் இருக்கின்றனர். அநுரவும், சஜித் பிரேமதாசவும் ராஜபக்ஷர்களுடன் டீல் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் எமது குழு வேறு எந்த குழுவுடனும் இல்லை. நாம் தேர்தல் பிரசாரங்களை தீவிரமாக ஆரம்பித்துள்ளோம். அதில் மக்களும் இணைந்து கொண்டிருக்கின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38
news-image

நாராஹேன்பிட்டியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து

2025-03-20 17:44:18
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; 107...

2025-03-20 17:28:45