சாமிமலை மஸ்கெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் ஸ்தலத்திலே பலியானதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ஸ்டஸ்பி தோட்டத்தை சேர்ந்த 55 வயதுடைய முத்தையா அமரஜோதி என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் சாமிமலையிலிருந்து மஸ்கெலியாவை நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸின் பயணித்த குறித்த பெண்மனி கவரவில தமிழ் வித்தியாலயத்திற்கருகில் இறங்கி பாதையை கடக்க முற்பட்ட போதே அதே பஸ்ஸின் முன்சில்லில் சிக்குண்டு ஸ்தலத்திலே பலியானதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து இன்று மதியம் 12.30 மணியவில் சம்பவித்துள்ளதாகவும் பஸ்ஸின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் மஸ்கெலியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.