மதுபோதையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகனை தாக்கிய நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
ஊர்காவற்துறை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (24) இரவு மது போதையில், குறிகட்டுவான் பகுதியில் கடமையில் இருந்திருந்தார். இதன்போது, வீதியால் சென்ற பொதுமகனிடம் இலஞ்சம் பெற முயன்றதோடு அவர்மீது தாக்குதலும் மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். அந்தவகையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை தலா ஒரு இலட்சம் பெறுமதியிலான இரண்டு ஆள் பிணைகளில் செல்வதற்கு அனுமதியளித்திருந்தார். அத்துடன் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM