தனக்கான கதைகளை தெரிவு செய்வதில் தொடர்ந்து வித்தியாசம் காட்டி வருபவர் நடிகர் அருள்நிதி. இவர் தற்போது மொழி படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லுமளவிற்கு தயாராகியுள்ள பிருந்தாவனம் என்ற படத்தில் பேசமுடியாத திறனுள்ளவர் என்ற கேரக்டரில் நடித்து அசத்தியிருக்கிறார். அண்மையில் தணிக்கைக் குழுவினர் இப்படத்தைப் பார்த்துவிட்டு உடனே ஒப்புதல் அளித்துவிட்டனர். இந்த மகிழ்ச்சியில் மீண்டும் இயக்குநர் ராதாமோகனுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் அருள்நிதி.

இது குறித்து அவரிடம் கேட்டபோது, ராதா மோகன் அவர்களுடன் பணியாற்றுவது ஒரு வித்தியாசமான அனுபவம். தற்போது இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற படத்தில் நடித்து வருகிறேன். இதன் படபிடிப்பு முடிவடைந்தவுடன் ஜுலை மாதத்தில் ராதாமோகனின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறேன். கதைகளம், படத்தின் பெயர், உடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் ஆகியவற்றைப் பற்றி விரைவில்அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்’ என்றார்.

இதனிடையே ‘பிருந்தாவனம்’ படத்தை மே மாத இறுதியில் வெளியிடலாம் என்ற திட்டத்துடன் பணியாற்றிவருவதாக அதன் தயாரிப்பாளர் ஷான் சுதர்சன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : சென்னை அலுவலகம்