இறக்குவானை குரேகடை பகுதியில் இன்று காலை இரு குழுக்கள் இடையே இடம்பெற்ற மோதலால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

காதல் திருமணம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை ஒன்றையடுத்தே இரு குழுக்கள் இடையே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

குறித்தப் பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பலரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.