ஜனநாயகத்தை பாதுகாக்கத் தவறிய சஜித், அநுரவுக்கு தேர்தலில் போட்டியிட எந்த தார்மீக உரிமையும் கிடையாது - பந்துல

24 Aug, 2024 | 11:06 PM
image

(எம்.மனோசித்ரா)

மட்டக்களப்பில் 75 சதவீத மேலதிக வாக்குகளால் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவார். ஜனாநாயகத்தை பாதுகாக்கத் தவறிய சஜித்திற்கோ அநுரவுக்கோ தேர்தலில் போட்டியிட எந்த தார்மீக உரிமையும் கிடையாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மட்டக்களப்பில் சனிக்கிழமை (24) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

இந்தப் பிரதேசத்தில் 75 வீத மேலதிக வாக்குகளினால்   ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார். ஐ.தே.க, மக்கள் ஐக்கிய முன்னணி, பொதுஜன பெரமுன உட்பட  அனைத்து கட்சிகளையும் இணைத்த பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க மாத்திரம் தான் போட்டியிடுகிறார். பிள்ளையானின் கட்சி, அதாவுல்லாவின் கட்சி உட்பட சிறுபான்மை கட்சிகள் இணைந்து பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குகின்றன. ரணில் விக்ரமசிங்கவை வெல்ல வைப்பதற்காக அன்றி, தாய் நாட்டை மீள கட்டியெழுப்பும் திட்டத்தை வெல்ல வைப்பதற்காகவே மக்கள் வாக்களிக்கின்றனர்.

கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வீதியில் கொல்லப்பட்டனர். வீடுகள் எரிக்கப்பட்டன. நாட்டை பங்களாதேஷமாக மாற்ற முயன்றார்கள். ஜனநாயகத்தை பாதுகாக்கவும் மனித உயிர்களைக் காக்கவும் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தார். ஜனாநாயகத்தை பாதுகாக்கத் தவறிய சஜித்திற்கோ அநுரவுக்கோ தேர்தலில் போட்டியிட எந்த தார்மீக உரிமையும் கிடையாது. நாட்டையும் ஜனநாயக்தையும் பாதுகாத்த ரணில் விக்ரமசிங்க 70 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார்.

நாடு பின்னடைந்து சுற்றுலா பயணிகள் வருகை தராத நிலை காணப்பட்டது. வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 420 ரூபாவுக்கு டொலரை  பெற்று அனுப்பும் நிலை காணப்பட்டது. கடனை மீளச் செலுத்த முடியாமல் வங்குரோத்து நாடாக வெளிநாடுகள் அறிவித்தன. வங்குரோத்து நாடுகளின் கடன் பத்திரங்களை வெளிநாடுகள் ஏற்கவில்லை. அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டது. வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்ய முடியவில்லை.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு அதன் நிபந்தனைகளை ஏற்றிருக்காவிட்டால் ஆப்கானிஸ்தான், சிம்பாம்வே போன்ற நிலைக்கு நாடு சென்றிருக்கும். 2027 வரை அதே போன்றே ஒப்பந்தத்தை பாதுகாக்காவிட்டால் 2025 வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்படும். அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காது. அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படும். ஓய்வூதியம் வழங்க முடியாது போகும். ரணில் விக்ரமசிங்க ஏற்படுத்திக் கொண்ட  ஒப்பந்தத்தை விடுத்து செயற்பட்டால், எந்த வேட்பாளராலும் வரவு செலவுத் திட்டத்தை முன்னெடுக்க முடியாது போகும்.  

2025 வரவு  செலவுத் திட்டம் தயாரிப்பதற்கு எவ்வளவு தொகை தேவை என சஜித்தினால் கூற முடியுமா என சவால் விடுகிறேன். ஜனாதிபதி செய்து கொண்ட உடன்படிக்கையை மீறினால் ஒரு மாதத்திலே நாடு மீண்டும் வீழ்ச்சியடையும். அரச ஊழியர்களுக்கு 3 வருட காலத்திற்கு தொடர்ச்சியாக 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட இருக்கிறது. சம்பள முரண்பாடு தீர்க்கப்பட்டு அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட இருக்கிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 17:05:15
news-image

உலக வங்கியின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில்...

2025-03-21 17:09:26
news-image

161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

2025-03-21 16:45:59
news-image

ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு...

2025-03-21 17:07:00
news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற...

2025-03-21 15:48:13
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44
news-image

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய 10...

2025-03-21 14:42:49