விஜய் சேதுபதி - பாண்டிராஜ் - நித்யா மேனன் இணையும் புதிய படம்

24 Aug, 2024 | 04:53 PM
image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி அண்மையில் வெளியான 'மகாராஜா' எனும் திரைப்படம் - படமாளிகையில் வெளியாகி இந்திய மதிப்பில் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து வணிக ரீதியான வெற்றியை பெற்றது. அத்துடன் மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் டிஜிட்டல் தளத்திலும் வெளியாகி, இந்தியாவில் அதிகமான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்ட திரைப்படம் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது. இந்நிலையில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் புதிய  படத்தினை பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத திரைப்படத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை வென்ற நித்யா மேனன் நடிக்கிறார்.  இந்தத் திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி ஜி தியாகராஜன் - செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். 

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தினை பற்றி புதிய தகவல்கள் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். திறமை மிக்க கலைஞர்களான விஜய் சேதுபதி- நித்யா மேனன் - பாண்டி ராஜ்- ஆகியோர் ஒன்றிணைந்திருப்பதால் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகும்...

2025-02-12 17:05:51
news-image

நடிகர் தேவ் நடிக்கும் 'யோலோ' படத்தின்...

2025-02-12 17:06:14
news-image

நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் 'ஸ்வீட்ஹார்ட்'...

2025-02-12 17:05:29
news-image

எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கும் 'கூரன்' திரைப்படத்தின் வெளியீட்டுத்...

2025-02-12 16:50:42
news-image

தமிழ்நாட்டு விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு...

2025-02-12 16:51:14
news-image

பிரைம் வீடியோவில் வெளியாகும் கதிர் -...

2025-02-12 16:22:53
news-image

தமிழ் திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட...

2025-02-12 15:59:29
news-image

யோகி பாபு நடித்திருக்கும் 'லெக் பீஸ்'...

2025-02-12 14:51:36
news-image

'காதல் என்பது பொதுவுடமை' படத்தின் இசை...

2025-02-11 22:33:07
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் பிரதீப்...

2025-02-11 17:30:29
news-image

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின்...

2025-02-11 17:20:45
news-image

நடிகர் லியோ. சிவக்குமார் நடிக்கும் 'டெலிவரி...

2025-02-11 17:19:29