மன்னாரில் இதுவரை 228 டெங்கு நோயாளர்கள் பதிவு - மன்னார் வைத்திய அதிகாரி

24 Aug, 2024 | 04:38 PM
image

மன்னாரில் இதுவரை 228 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அங்கு டெங்கு நோய் அபாயம் அதிகரித்திருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும் எனவும் மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வைத்திய அதிகாரி கதிர்காமநாதர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 

மன்னாரில் இதுவரை 228 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இத்தொகை கடந்த 2023ஆம் ஆண்டை விடவும் இந்த ஆண்டு சிறிதளவு அதிகரித்துள்ளது.

வழமையாக ஒக்டோபர் மாதத் தொடக்கத்திலேயே மன்னாரில் டெங்கு அபாயம் ஏற்படும். ஆனால், இவ்வருடத்தில் சற்று நேரத்துடனே டெங்கு அபாயம் பரவக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆகவே, பொதுமக்கள் அனைவரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

நீடித்த காய்ச்சல், கண்ணுக்குப் பின்னால் வலி போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரிடம் ஆலோசனைகளைப் பெற்று இரத்தப் பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும்.

இது தொடர்பாக அரச வைத்தியசாலையை நாடுவது மிகவும் சிறந்தது.

தற்பொழுது டெங்கு நோய் காணப்படும் இடங்களாக நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள வங்காலையும், மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சாவக்கட்டும் இனங்காணப்பட்டுள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் அமைச்சர் கெஹெலியவுக்கு பிணை!

2026-08-18 16:47:33
news-image

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தினார்...

2026-08-18 16:37:09
news-image

கண்டி - பதீயத்தலாவ வீதியில் விபத்து...

2026-08-18 16:33:40
news-image

மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்..!

2026-08-18 16:19:02
news-image

கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை ஜோன் ஹேர்பட்...

2026-08-18 15:46:42
news-image

உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் பேராதனை...

2026-08-18 14:42:57
news-image

பிரித்தானிய Global Marine Systems நிறுவனத்துக்காக...

2026-08-18 14:55:41
news-image

இலங்கை - லிதுவேனியா இடையிலான 30...

2026-08-18 14:34:59
news-image

யாழில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை...

2026-08-18 14:54:30
news-image

கொழும்பு பேராயருடனான இலவச செயற்பாட்டு மையத்தின்...

2026-08-18 14:48:29
news-image

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரர்...

2026-08-18 13:42:24
news-image

எல் - நினோ காலநிலை தாக்கம்...

2026-08-18 13:36:40